லோகேஷ், உன்னோட ஸ்டைல்ல ஒரு படம் பண்றோம்.. தூதுவிட்ட முன்னணி நடிகர்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி கடந்த பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் மாஸ்டர். இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

படத்தின் நீளம் ஒரு குறையாக சொல்லப்பட்டாலும் அது படத்தை பாதிக்கவில்லை என்பது வசூலில் இருந்தே தெரிகிறது. இருந்தாலும் படத்தில் சொல்லப்பட்ட குறைகளையெல்லாம் ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் மனதார ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் முதலில் மாஸ்டர் படத்தில் விஜய் படம் பாதி, லோகேஷ் படம் பாதி என்பதில் கவனம் செலுத்தி சில விஷயங்களில் கோட்டை விட்டுவிட்டேன் எனவும், அடுத்த முறை இணைந்தால் அப்படி இருக்காது என லோகேஷ் ஏற்கனவே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல தற்போது மீண்டும் லோகேஷ் மற்றும் விஜய் இருவரும் இணைவதற்கான நேரம் வந்துவிட்டதாம். தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக தளபதி 65 படத்தில் பிசியாக உள்ளார் விஜய். இதைத்தொடர்ந்து அடுத்ததாக தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார்.

thalapathy66-vijay-lokesh
thalapathy66-vijay-lokesh

இதற்காக பல இயக்குனர்கள் கதை சொன்னாலும் இறுதியாக விஜய் டிக் அடித்திருப்பது லோகேஷ் கனகராஜ் தான். அதற்கு காரணம் லோகேஷ் ஸ்டைலில் ஒரு படம் செய்ய வேண்டும் என்பது விஜய்யின் நீண்ட நாள் ஆசையாம். அதன் காரணமாக லோகேஷ் கனகராஜிடம் தளபதி விஜய் போன் செய்து தளபதி 66 படத்திற்காக உன்னுடைய ஸ்டைலில் ஒரு கதை எழுதிக் கொண்டு வா என கூறியுள்ளாராம்.

இதன் காரணமாக தற்போது லோகேஷ் மற்றும் அவரது குழுவினர் விஜய்க்காக தளபதி66 படக்கதையை வெறித்தனமாக எழுதிக் கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. விக்ரம் படத்தை தொடங்க இன்னும் நாட்கள் இருப்பதால் அதற்குள் தளபதி 66 படத்தின் பாதி வேலையை முடித்து விடுவாராம் லோகேஷ் கனகராஜ்.

மஜாப்பா, மாஜாப்பா!

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -