மாஸ்டருக்கு நாள் குறித்த சன் டிவி.. விஸ்வாசம் TRP ரெக்கார்டை ஓரம் கட்டுவாரா விஜய்?

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற மாஸ்டர் படம் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்ப தேதி குறித்து விட்டதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் முதன் முதலில் உருவான திரைப்படம் மாஸ்டர். கடந்த பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருந்தாலும் வசூலில் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை.

இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வருகின்ற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக அதிக வாய்ப்பு இருப்பதாக சன் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

சமீபகாலமாக ரசிகர்கள் திரையரங்குகளில் வசூல் போட்டிகள் போட்டுக் கொள்வதைப் போல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் புதிய படங்களின் டிஆர்பி போட்டிகளையும் கவனித்து வருகின்றனர். அந்தவகையில் தல அஜித் நடிப்பில் உருவான விஸ்வாசம் திரைப்படம் இதுவரை முதலிடத்தை தக்க வைத்து வருகிறது.

viswasam-TRP-Records
viswasam-TRP-Records

அஜித்தின் விஸ்வாசம் பட டிஆர்பி ரெக்கார்டை விஜய்யின் பிகில் படம் முறியடிக்கும் என ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில் அது நடக்கவில்லை. இந்நிலையில் கண்டிப்பாக மாஸ்டர் படத்தை வைத்து அதை முறியடித்துவிட வேண்டும் என விஜய் ரசிகர்கள் உக்கிரமாக இருக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் சன் டிவியை விட அதிகமாக மாஸ்டர் படத்திற்கு புரமோஷன் செய்கிறார்கள் தளபதி ரசிகர்கள். மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான அடுத்த பதினைந்தாவது நாளில் அமேசான் தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -