கதை திருட்டில் சிக்கிய மாஸ்டர்.. இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு இது வேறயா, சுத்தம்!

இதுவரை இல்லாத அளவுக்கு விஜய் படங்களில் மாஸ்டர் படம் மட்டும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. சமீபத்தில் தங்களுடைய அறிவிப்பிலிருந்து பின்வாங்கிய தமிழக அரசை தொடர்ந்து மேலும் ஒரு பெரிய பிரச்சனை மாஸ்டர் படத்தின் மீது விழுந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதமே மாஸ்டர் படம் வெளியாக வேண்டியது. உலகளவில் ஏற்பட்ட பிரச்சனையால் அந்த படம் தள்ளிச் சென்றது. தற்போது ஒரு வழியாக வருகின்ற பொங்கலுக்கு தியேட்டர்களில் வெளியாக உள்ளதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். மேலும் சமீபத்தில் திரையரங்கு தொழில்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வர முதலமைச்சரை சந்தித்து 100 சதவிகித மக்களை அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தார்.

முதலில் அந்த கோரிக்கையை ஏற்று ஓகே சொல்லிவிட்டார்கள். ஆனால் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் கொடுத்த டார்ச்சலில் அந்த முடிவிலிருந்து பின்வாங்கினர். இதுவே மாஸ்டர் படக்குழுவுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். இருந்தாலும் காட்சிகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என ஒரு ஆப்ஷன் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் மாஸ்டர் படம் சுமூகமாக வெளியாகப் போகிறது என எதிர்பார்த்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென மாஸ்டர் படத்தின் கதை என்னுடையது என ஒருவர் பிரச்சனையை கிளப்பியுள்ளது மாஸ்டர் படத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

vijay-master-1
vijay-master-1

ரங்க தாஸ் என்பவர் 2017ஆம் ஆண்டு எழுதிய ‘நினைக்கும் இடத்தில் நான்’ என்ற கதையும் மாஸ்டர் கதையும் ஒன்றாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என பிரச்சனையை கிளப்பியுள்ளார். டீசரை பார்த்ததும் அந்த டவுட்டு வந்ததாக கூறியுள்ளார்.

மாஸ்டர் டீசர் வந்து ஒரு மாதங்களுக்கு மேலான நிலையில் ரிலீசுக்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் போது இந்த பிரச்சனையை எழுப்பியுள்ளார். ஏற்கனவே விஜய் நடிப்பில் வந்த கத்தி, சர்கார், மெர்சல் போன்ற படங்கள் கதை திருட்டில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story

- Advertisement -