மாஸ்டர் படம் 200 கோடி எல்லாம் இல்லீங்க, புரிஞ்சுக்கோங்க.. புலம்பும் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ

மாஸ்டர் படம் 200 கோடி வசூல் செய்து விட்டதாக சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ சமீபத்தில் கொடுத்த பேட்டி அனைவரையும் அதிர வைத்துள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மாஸ்டர். இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத மக்கள் கூட்டம் மாஸ்டர் படத்தை கண்டுகளித்ததாக தியேட்டர் உரிமையாளர்கள் தளபதி விஜய்யை கொண்டாடி வருகின்றனர்.

மேலும் 50 சதவிகித பார்வையாளர்களை வைத்துக்கொண்டே மாஸ்டர் திரைப்படம் குறைந்த நாட்களில் 200 கோடி வசூல் செய்து விட்டதாக தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடினர். ஆனால் உண்மையில் 200, 300 கோடி என்று சொல்வதெல்லாம் என்னவென்றே புரியாமல் ரசிகர்கள் கூறுகின்றனர் என்று தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வருத்தப்பட்டுள்ளார்.

படத்தின் லாபம் தான் ஒருவரை காப்பாற்ற வேண்டும், 200 கோடி 300 கோடி என்று சொல்வதெல்லாம் கிராஸ் கலெக்சன் அதாவது விற்கப்பட்ட தொகை எனவும் குறிப்பிட்டுள்ளார். அதற்கு மேல் எவ்வளவு வசூல் செய்கிறதோ அதுதான் லாபம் எனவும் ஆடியோ லான்சில் எடுத்த பாடத்தை அப்படியே சமீபத்திய பேட்டியில் எடுத்துள்ளார்.

xavier-britto-master-producer
xavier-britto-master-producer

இதன் மூலம் 200 கோடி 300 கோடி வசூல் என்பது தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவு லாபம் தராது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். அது படத்தின் பட்ஜெட் மட்டுமே எனவும், அதையும் மீறி படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதுதான் கணக்கு எனவும் புட்டுப்புட்டு வைத்துள்ளார். ஆனால் மாஸ்டர் படம் நினைத்ததை விட பெரிய வெற்றி கிடைத்ததாக சொல்லத் தவறவில்லை.

இதற்கிடையில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்களான லலித்குமார் மற்றும் சேவியர் பிரிட்டோ ஆகிய இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக அடிக்கடி செய்திகள் வெளியானது. அதை எந்த இடத்திலும் இல்லை என சேவியர் பிரிட்டோ மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தின் லாபம் என்பது தயாரிப்பாளர்களை மட்டுமே தெரியும் என 200 கோடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்