25 கோடி வேண்டும்.. மாஸ்டர் படத்தால் மனம் நொந்து போன தயாரிப்பாளர்

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகி எதிர்பார்த்ததை விட நல்ல வசூல் மழை பொழிந்து வருவதாக தயாரிப்பாளர்கள் முதல் வினியோகஸ்தர்கள் வரை தொடர்ந்து பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர்.

ஆனால் மாஸ்டர் படம் ரிலீஸ் செய்வதற்கு முன்னால் சந்தித்த பிரச்சனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. தயாரிப்பாளர் வாங்கிய கடனுக்கு வட்டி மேல் வட்டி ஏறி வட்டி கட்ட முடியாமல் திணறியதை பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம்.

அதனை தொடர்ந்து மாஸ்டர் படம் தியேட்டரில் வெளியாகாமல் OTT தளத்தில் வெளியாகப் போவதாக தொடர்ந்து ஒரு சில இடைவெளியில் வதந்திகள் வந்து கொண்டே இருந்தன. இதற்கிடையில் மாஸ்டர் படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தது.

அதனை மிகப்பெரிய டிஜிட்டல் தொழில்நுட்ப கம்பெனியில் இருந்து ஒருவர் வெளியிட்டதாக மாஸ்டர் குழு கண்டுபிடித்தனர். தற்போது அந்த கம்பெனி மற்றும் அந்த நபரின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். என்னதான் படக் காட்சிகள் லீக் ஆனாலும் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இது ஒருபுறமிருக்க மாஸ்டர் படக்குழுவினர் மாஸ்டர் படத்தின் காட்சிகளை அனுமதி இல்லாமல் வெளியிட்டதற்காக வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். மேலும் அந்த வழக்கில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் சுமார் 25 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என முறையிட்டுள்ளாராம்.

மாஸ்டர் படம் ஆங்காங்கே சில நஷ்டத்தை சந்தித்துள்ளதால் அதை சரிகட்ட தயாரிப்பாளர் விவரமான முறையில் வேலையை செய்துள்ளார் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர். சரியான நேரத்தில் காட்சிகளை லீக் செய்ததும் படக்குழுவினருக்கு சாதகமாக அமைந்து விட்டதாம்.

master-cinemapettai
master-cinemapettai

இதற்கு பெயர்தான் ராஜதந்திரம்!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்