மாஸ்டர் மூவி விஜய் சேதுபதி படமா.? எரிச்சலை கிளப்பிய செய்தியாளர்.. உச்சக்கட்ட கோவத்தில் பதிலளித்த பவானி!

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, படத்தில் இவரது நடிப்பை அனைத்துத் தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகிவருகின்றனர். விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசனும் இணைந்து நடித்த லாபம் திரைப்படம் கூட விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

செய்தியாளர் ஒருவர் விஜய் சேதுபதியிடம் நேரடியாக மாஸ்டர் படத்தை பற்றி கேட்ட கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது தனியார் நிறுவனம் தொடங்க சர்வீஸ் சென்டர் ஒன்று திறப்பு விழாவிற்காக விஜய் சேதுபதி சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்போது ஒரு செய்தியாளர் மாஸ்டர் படம் விஜய் சேதுபதிக்காக உருவாக்கப்பட்ட படம் என பலரும் கூறுகின்றனர். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு விஜய் சேதுபதி இந்தக் கேள்வி அவசியம் இல்லாதது என்றும், மேலும் விஜய்யால் மட்டும்தான் மாஸ்டர் படம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது என்று கூறியுள்ளார். திரையரங்கில் வந்து பார்த்த மக்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

mahendran vijay sethupathi
mahendran vijay sethupathi

பின்பு 800 படத்தைப் பற்றி கேள்விகள் முன்வைத்தனர். அதற்கு விஜய் சேதுபதி முடிந்த பிரச்சனையை கிளப்பாதீர்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்