ஜோதிகாவின் ‘உடன்பிறப்பே’ படத்தில் முதல் முதலாக இயக்குனராகும்.. மாஸ்டர் பட எழுத்தாளர்!

36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகாவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து அது மாதிரி நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அவருக்கு சப்போர்ட் செய்யும் வகையில் சூர்யா ஜோதிகாவின் படங்களை தயாரித்து வருகிறார்.

அந்த வகையில் ஜோதிகா நடிப்பில் அடுத்ததாக உடன்பிறப்பே என்ற திரைப்படம் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியாக உள்ளது.இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இதில் ஜோதிகா, கிழக்குசீமையிலே நடித்த ராதிகா போலவே இருப்பதாகவும், பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர்.

மேலும் இந்தப்படம் கிராமத்தை மையமாக கொண்டுஎடுக்கப்பட்டுள்ளது என படக்குழுவினர் கூறியுள்ளனர். உடன்பிறப்பே படத்தை முதன்முதலாக பிரபல எழுத்தாளர் பொன் பார்த்திபன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சூப்பர் ஹிட் படங்களான மாஸ்டர், ஹீரோ, இரும்புத்திரை, சர்தார், காற்றின் மொழி பிருந்தாவனம் போன்ற படங்களில் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

pon-parthiban-cinemapettai
pon-parthiban-cinemapettai

எனவே இயக்குனராக அவதாரம் எடுக்கும் பொன் பார்த்திபனுடன் ஜோதிகா, சசிக்குமார் சமுத்திரக்கனி இவர்களின் கூட்டணி கூட்டணியில் ‘உடன்பிறப்பே’ சிறப்பான படமாக உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் இந்தப் படத்தின் முதல் கட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதால், படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகளின் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சீக்கிரம் வெளிவரவுள்ளது.

இதற்கிடையில் பொன் பார்த்திபன், விஷால் மற்றும் சுனைனா இணைந்து நடிக்கும் விஷால் 32வது படத்திற்கு வசனம் எழுத ஒப்பந்தம் ஆகி உள்ளார். இதுவரை வசனங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பொன் பார்த்திபன் இயக்குனராகவும் தனி இடத்தை பிடிப்பார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்