சூட்டோடு சூடாக துவங்கப்படும் மாஸ்டர் செஃப் சீசன்2.. விட்டதைப் பிடிக்க கட்டம் கட்டிய சன் டிவி!

சன் டிவியில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு பிரபல முன்னணி நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்பட்ட சமையல் போட்டி மாஸ்டர் செஃப் . இந்த நிகழ்ச்சி கோலாகலமாக ஒளிபரப்பாகி தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவின் மாஸ்டர் செஃப் போட்டியை தழுவி தமிழ் மொழியில் எடுக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு . 14 போட்டியாளர்களுடன் 30 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது. இதில் நடுவர்களாக ஹரிஷ், ஆர்த்தி சம்பத், மற்றும் கௌஷிக் ஆகியோர் கலக்கி வந்தனர். மாஸ்டர் செஃப் சீசன்1ன் டைட்டில் வின்னராக தேவகி விஜயராமன் பட்டத்தை தட்டிச் சென்றார். தற்பொழுது அடுத்த அத்தியாயத்திற்கு தயாராகிவருகிறது மாஸ்டர்ஸ் செஃ ப் நிகழ்ச்சி.

பெரும்பாலும் ஒரு நிகழ்ச்சி முடிவடைந்தால் அதன் அடுத்த சீசன் வெளிவர குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது ஆகும். ஆனால் சன் டிவியின் மாஸ்டர்செஃப் நிகழ்ச்சியோ முடிவடைந்து சில நாட்களே ஆன நிலையில் இதன் அடுத்த சீசனை ஒளிபரப்பப் போவதாக அதன் அதிகாரப்பூர்வ தகவல் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு போட்டியாக தொடங்கப்பட்ட சமையல் நிகழ்ச்சி தான் சன் டிவியின் ‘மாஸ்டர் செஃப்’. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான நாளிலிருந்தே மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று வந்தது. தற்பொழுது இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்து அடுத்த அத்தியாயத்தை தொடங்க உள்ளது.

இப்பொழுது மாஸ்டர் செஃப் சீசன்2 விற்கான ஆடிஷனை நடத்திவருகின்றனர். இதற்கான தேர்வு முறை தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் ஆடிஷன் நிறைவுபெற்று நிகழ்ச்சியை விரைவாக துவங்குவர் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதியே தொடர்வாரா அல்லது வேறு தொகுப்பாளர்கள் வரப்போகிறார்களா என்றும் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சீசன் 2022ல் ஒளிபரப்பாகலாம் எனவும் தெரிகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்