மாஸ்டர் படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு முன்பும் பின்பும் நடந்த சூழ்ச்சி.. விஜய் மேல இவ்வளவு காண்டா? இல்ல பயமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படமானது பொங்கலுக்கு ரிலீசாகி ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்தது. இருப்பினும் படம் ரிலீஸ் ஆகும்போது 100% பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று உத்தரவிட்ட தமிழக அரசு,

அதன் பின்பு 50% பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவையும் வெளியிட்டது. இந்த தகவலால் திரையரங்கு உரிமையாளர்களும், பார்வையாளர்களும் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தனர்.

அதைத் தொடர்ந்து அடுத்த இரண்டாவது வாரமே அமேசான் தளத்தில் மாஸ்டர் வெளியானதும் மீண்டும் 100% பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது தளபதியின் மாஸ்டர் படத்தை திரையரங்கில் ஓடவிடாமல் கெடுப்பதற்காக, பின்புலத்தில் அரசியல் சித்து விளையாட்டு அரங்கேறியிருப்பது கண்கூடாகத் தெரிகிறது.

master-politics

இருப்பினும் அதையெல்லாம் அசால்டாக தூக்கி வீசிய தளபதியின் மாஸ்டர் திரையரங்குகளில் ஏகப்பட்ட வசூலை வாரி குவித்தது. அதன்பிறகு ஓடிடி-யிலும் 66 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிச் சென்றுள்ளது.

இருப்பினும் விஜயின் மீது ஏன் இவ்வளவு காண்டா? இல்ல பயமா? என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்