லியோ படத்தில் இணைந்த மாஸ் ஹீரோ.. ரோலக்ஸை மிஞ்சும் கேரக்டர்

லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் எதிர்பார்க்காத விஷயங்களை தனது படங்களில் வைக்கக் கூடியவர். அப்படி தான் லோகேஷ் லியோ படத்தில் என்ன செய்யப் போகிறார் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஆரம்பத்திலேயே லியோ படத்தில் மிஷ்கின், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் போன்ற பிரபலங்கள் நடிப்பதை உறுதி செய்து விட்டனர்.

இந்நிலையில் விக்ரம் படத்தில் சூர்யா 5 நிமிட ரோலகஸ் கதாபாத்திரத்தில் மிரட்டி விட்டு சென்றிருந்தார். விக்ரம் படத்தில் பெரிதும் பேசப்பட்டது சூர்யாவை பற்றி தான். மேலும் சூர்யா முதல் முறையாக தன்னை வில்லனாக அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தை தனியாக ஒரு படமாக லோகேஷ் எடுக்கவிருக்கிறார்.

Also read: விஜய் உடன் மோதிப் பார்க்க நாள் குறித்த பா ரஞ்சித்.. செகண்ட் இன்னிங்ஸ் தொடங்க போகும் விக்ரம்

இப்போது ரோலக்ஸ் மிஞ்சும் அளவிற்கு லியோ படத்தில் ஒரு கதாபாத்திரத்தை லோகேஷ் வைத்துள்ளார். அதில் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தனுஷிடம் தான் இந்த பேச்சுவார்த்தை நடந்திருக்கிறதாம். தனுஷின் கதை கேட்டவுடன் ஓகே சொல்லிவிட்டாராம்.

மேலும் காஷ்மீரில் நடைபெற்ற படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை. இப்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை பிரசாந்த் ஸ்டுடியோவில் நடைபெற இருக்கிறது. இதற்காக செட் போடும் பணி தற்போது தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆகையால் சென்னையில் நடக்க உள்ள படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொள்ள இருக்கிறார்.

Also read: புது அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ்.. பெரிய கேள்விக்குறியில் அடுத்தடுத்து கமிட் ஆன படங்கள்

மேலும் லியோ படத்தில் தனுஷ் நடிக்க உள்ள செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டும்இன்றி தனுஷ் லியோ படத்தில் நடிக்க விஜய் எப்படி ஏற்றுக் கொண்டார் என்ற குழப்பமும் நிலவி வருகிறது. ஏனென்றால் டாப் நடிகரின் படத்தில் மற்றொரு நடிகர் நடிக்க விரும்ப மாட்டார்.

ஆனால் தனுஷ் லியோ படத்தில் நடிப்பதற்கு விஜய் சம்மதித்து உள்ளார். மேலும் தனுஷ் உடைய கேரக்டர் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போது அதிகரித்து உள்ளது. தனுஷ் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் தற்போது பிஸியாக உள்ளார். சில நாட்கள் மட்டுமே லியோ படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி லியோ படத்தை பற்றிய அப்டேட் தொடர்ந்து வந்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க காத்திருக்கிறது.

Also read: வில்லன் நடிகரால் தலை வலியில் லோகேஷ்.. லியோ படப்பிடிப்பில் நடக்கும் குளறுபடி

Next Story

- Advertisement -