சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

கடைசியில் சிக்கிய ஆடு.. சிவகார்த்திகேயனை தொடர்ந்து கமல் பிரியாணி போடப் போகும் ஹீரோ

கமல் தற்போது அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் அரசியல், ஒரு பக்கம் நடிப்பு என ரொம்ப பிசியாக இருக்கும் அவர் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் மும்மரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதை அடுத்து அவர் இளம் மாஸ் ஹீரோக்களை வைத்து மிகப்பெரிய திட்டம் ஒன்றை போட்டு இருக்கிறார்.

அதாவது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தற்போது அதிக அளவு திரைப்படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. அதில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தையும் தயாரிக்க இருக்கின்றனர். ஏற்கனவே இது குறித்த தகவல்கள் வெளிவந்தாலும் தற்போது தான் அதற்கான காலம் கூடியிருக்கிறது.

Also read: ரஜினி, கமல் விரும்பிய நடிகையை அசால்டாக தூக்கிய ஹீரோ.. பலான விஷயம் தெரிந்து எஸ்கேப்பான ஹீரோயின்

இவரைத் தொடர்ந்து மற்றொரு மாஸ் ஹீரோ ஒருவரும் கமலின் வலையில் சிக்கி இருக்கிறார். தற்போது ஆண்டவர் அரசியலில் கவனம் செலுத்தி வந்தாலும் நடிப்பிலும், தயாரிப்பிலும் தான் அதிக ஆர்வம் காட்டுகிறாராம். ஏனென்றால் இதில் கிடைக்கும் லாபத்தை வைத்து தான் அவர் சில அரசியல் கணக்குகளையும் போட்டு வைத்திருக்கிறார்.

அதனாலேயே கமல் தற்போது முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுக்க தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது சிம்புவை வைத்தும் ஒரு திரைப்படத்தை அவர் தயாரிக்க இருக்கிறார். அந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்திருக்கும் சிம்புவுக்கு வெந்து தணிந்தது காடு 2 திரைப்படம் மட்டும் தான் கைவசம் இருக்கிறது.

Also read: விக்ரம் வெற்றியை போல் அடுத்த வெற்றிக்காக சரணடைந்த கமல்.. கிழித்து தொங்கவிட்ட சவுக்கு பிரபலம்

ஆனால் அந்தப் படத்திலும் இவர் இருக்கிறாரா இல்லையா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் அப்படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் நடந்து வரும் நிலையில் சிம்புவுக்கும் தயாரிப்பு தரப்புக்கும் சில மனஸ்தாபம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சுதா கொங்கரா மற்றும் சில முன்னணி இயக்குனர்களின் படங்களில் அவர் நடிக்கப் போகிறார் என்றெல்லாம் தகவல்கள் வந்தது.

ஆனால் அதெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் தான். அப்படி பார்த்தால் சிம்பு தற்போது வேறு படங்கள் எதுவும் கைவசம் இல்லாமல் இருக்கிறார். அந்த வகையில் சில பிரச்சனைகளில் சிக்கி இருந்த சிம்பு தற்போது ஆண்டவரின் தயாரிப்பில் நடிக்க இருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதிலாவது அவர் எந்த பிரச்சனையும் செய்யாமல் இருந்தால் சரிதான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Also read: சத்தமில்லாமல் வளர்ந்து வரும் ஹீரோ.. சிம்பு இடத்திற்கு வந்த ஆபத்து

- Advertisement -

Trending News