அந்த நடிகர் சொக்கத்தங்கம் என்று வாயார புகழ்ந்தவர்கள் அனைவரும் இப்போது வாயடைத்து போயிருக்கின்றனர். அந்த அளவுக்கு அவருடைய பெயர் டேமேஜ் ஆகி உள்ளது. தனக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த அந்த பிரபலத்தை விட்டு இவர் பிரிந்ததே பெரிய அளவில் சலசலக்க பட்டது.
இந்த சூழலில் சம்பந்தப்பட்டவரே மறைமுகமாக ஒரு விஷயத்தை சொல்லி கொளுத்தி போட்டு இருப்பது காட்டு தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. நம் குடும்பத்தில் ஒருவர் போல் இருந்த அந்த நடிகர் இப்படி ஒரு வேலையை செய்திருப்பாரா என யோசிக்கும் வேளையில் அது உண்மைதான் என்று சொல்லும் வகையில் சில சம்பவங்களும் நடந்து இருக்கிறது.
அண்ணனாக நினைத்தவரின் மனைவியிடமே சில்மிஷம் காட்டிய அந்த நடிகர் குட்டு வெளிப்பட்டபோது பெரிய அளவில் அலட்டி கொள்ளவில்லையாம். ஆனால் அப்போதே இந்த விவகாரம் கிசுகிசுவாக வெளிவந்தது. இப்படி இருக்கும் போது வெளிப்படையாகவே இந்த விஷயம் பரவ ஆரம்பித்திருப்பது அவருக்கு மரண பீதியை கொடுத்து விட்டதாம்.
இதனால் பதறிப் போன அந்த ஹீரோ சம்பந்தப்பட்டவரிடம் காலில் விழாத குறையாக கெஞ்சி இருக்கிறார். ஆனாலும் உனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது என்று அவர் சாபம் விட்டிருக்கிறார். அதனால் தானோ என்னவோ இப்போது பெண்கள் மத்தியில் நடிகருக்கு இருக்கும் மார்க்கெட் சரசரவென சரிந்து விட்டது.
அதிலும் சோசியல் மீடியாவில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்திருப்பது நடிகரின் திரை வாழ்வையும் முடக்கும் அளவுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதனால் அவர் தன் நட்பு வட்டாரத்தை வைத்து தன்னை பற்றிய நல்ல விஷயங்களை எல்லாம் கிளப்பி விட சொல்லி இருக்கிறாராம்.
ஆனால் அதுவே பல விஷயங்கள் வெளிவருவதற்கு காரணமாகவும் அமைந்திருக்கிறது. இப்படி நடிகர் குறித்து வெளிவந்திருக்கும் செய்தி குடும்பத்திற்குள்ளும் புயலை கிளப்பிவிட்டதாம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் நடிகர் கேரியரை காப்பாற்றிக் கொள்ள ஆலோசனை நடத்தி வருகிறாராம்.