துருவ் விக்ரம் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் கதை இதுதான்.. இன்னொரு அவார்டு பார்சல்!

பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் போன்ற படங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக உருவெடுத்துள்ளவர் மாரி செல்வராஜ். தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் ஒவ்வொரு படங்களின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

நடிகர்களுக்காக ரசிகர்கள் படத்திற்கு போன காலம் போய் தற்போது மீண்டும் இயக்குனர்களின் படைப்புகளை பார்ப்பதற்காக ரசிகர்கள் படையெடுக்கின்றனர். இதுவே தமிழ் சினிமாவுக்கு ஒரு வெற்றிதான்.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சொற்ப இயக்குனர்கள் மட்டுமே இந்த மாதிரி வரவேற்ப்பை பெற்று வைத்துள்ளனர். ஷங்கர், ஏ ஆர் முருகதாஸ், வெற்றிமாறன் போன்றோர் படங்களில் யார் ஹீரோ என்பதையெல்லாம் ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள்.

இயக்குனருக்காக கூட்டம் கூட்டமாக தியேட்டரை நோக்கி படையெடுப்பார்கள். அந்த வரிசையில் அடுத்ததாக இணைந்துள்ள மாரி செல்வராஜ், கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளார்.

தற்போது அந்த படத்திற்கான கதை களம் என்ன என்பது தெரியவந்துள்ளது. ஒரு கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து படம் உருவாக உள்ளதாம். இதிலும் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை கையில் எடுத்துள்ளாராம் மாரி செல்வராஜ்.

பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் போன்ற படங்கள் அனைத்துமே ஒரு குறியீட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதேபோன்ற கதையில்தான் மாரி செல்வராஜ் களமிறங்க உள்ளார்.

maariselvaraj-dhruv-pa-ranjith-cinemapettai
maariselvaraj-dhruv-pa-ranjith-cinemapettai