இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 13 படங்கள்.. விஜய் டிவி பிரபலத்தின் மறக்குமா நெஞ்சம்

March 22 OTT Release Movies : தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் இப்போது வெளியாகவில்லை. கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல், மே மாதத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர். ஆகையால் பெரிதும் எதிர்பார்த்த தமிழில் பெரிய நடிகர்களின் படங்கள் இப்போதைக்கு இல்லை.

தியேட்டரில் ஜிவி பிரகாஷ் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ரெபெல் படம் வெளியாகிறது. கேரளாவில் தமிழனுக்கான போராட்டப் படமாக இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

விஜய் டிவியின் தொகுப்பாளரான ரக்சனின் மறக்குமா நெஞ்சம்

ஓடிடியில் தமிழில் விஜய் டிவியின் தொகுப்பாளரான ரக்சன் மற்றும் மலினா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மறக்குமா நெஞ்சம் படம் டென்ட் கொட்டா தளத்தில் வெளியாகிறது. ஏற்கனவே ரக்சன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயராம் மற்றும் மம்மூட்டி ஆகியோர் நடிப்பில் சீரியல் கில்லர் கதையை கொண்ட ஆபிரகாம் ஆஸ்லர் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது இந்த படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.

சில்லியன் மர்ஃபி ஹீரோவாக நடித்த ஓப்பன்ஹைமர் படம் கடந்த வருடம் ஜூலை மாதம் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஏழு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற இந்த படம் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் ஜனவரி மாதம் தியேட்டரில் வெளியான திரைப்படம் ஃபைட்டர். ஆக்சன் நிறைந்த காட்சிகளுடன் உருவான இந்த படம் நெட்பிளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இது தவிர கொரியன் மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் ஓடிடியில் இந்த வாரம் படங்கள் வெளியாகிறது. ஆகையால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்க உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்