கோவையில் பிரதமர் கலந்து கொண்ட விழாவில் துவங்கப்பட்ட புதிய திட்டங்கள்.. நன்றி கூறிய முதல்வர் எடப்பாடி!

கோவை மாவட்டத்திற்கு வருகை தந்து பல திட்டங்களை துவங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தனது உரையின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா காலத்திலும் இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை தமிழகம் ஈர்த்து உள்ளதால், முதலீடுகளை ஈர்க்க மாநில பட்டியலில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.

அத்துடன் காவிரி – குடகனாறு இணைப்பு திட்டம் மற்றும் குடிமராமத்து திட்டத்தின் மூலம் மாநிலத்தில் நீர்ப்பாசன வசதியை மேம்படுத்தி தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது.

அதேபோல் கோதாவரி – காவிரி நதி நீர் இணைப்புத் திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்குமாறும், நவாமி கங்கை திட்டத்தை போன்று காவிரி கிளை நதிகள் புனரமைக்கப் படவேண்டும் என்றும் அதற்காக நிதி ஒதுக்கீடு செய்து தருமாறும் பிரதமரை தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் மத்திய மாநில அரசுகள் 50 சதவீத – 50 சதவீத அடிப்படையில் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கூட்டு திட்டமாக செயல்படுத்த ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் தூத்துக்குடி மற்றும் சேலம் விமான நிலையங்களில் இருந்து இரவு நேர விமானங்கள் இயக்கவும், மதுரை மற்றும் கோவை விமான நிலையங்களில் விரிவாக்கப்பட வேண்டும் என்றும்,

கோவையில் இருந்து துபாய்க்கு நேரடியாக விமானம் இயக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவுக்கு வந்த உடனே விரைவில் அணைத்து பள்ளி வகுப்புகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தற்போது அறிவித்தபடி 9, 10, 11 வகுப்புகளில் மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக தெரிவித்துள்ளது தமிழக அரசு.

- Advertisement -