மம்முட்டிக்கு சரியான பாடத்தை கற்பித்த மன்சூர்.. பார்க்க தான் கோமாளி ஆன மனசு சொக்கத்தங்கம்

Mammootty and Mansoor: சமூக வலைதளங்களில் மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றிய அவதூறாக பேசிய விஷயங்கள் தான் சர்ச்சையாக வெடித்துக் கொண்டு வருகிறது. இதில் மன்சூர் அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை சொன்னாலும் யாரும் காது கொடுத்து கேட்க தயாராக இல்லை. காரணம் த்ரிஷா பெரிய நடிகை என்பதினாலும், மன்சூர் அலிகானை ஈசியாக கார்னர் பண்ண முடியும் என்பதினால் ஆளுக்கு ஆள் போர் கொடியை தூக்கி வருகிறார்கள்.

ஆனால் இவர் உண்மையாகவே எதார்த்தமாக பேசக் கூடிய நபராகவும், மனதில் கள்ளம் கபட இல்லாத ஒரு நடிகராகவும் தான் மக்கள் இதுவரை இவருக்கு சப்போர்ட் செய்து வந்திருக்கிறார்கள். அந்த வகையில் யாரிடமும் வஞ்சகத்தை கொட்டாத ஒரு நடிகருக்கு தற்போது ஒரு அவப்பெயர் ஏற்பட்டு இருக்கிறது. இவரை பற்றி இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும் என்றால் சக நடிகர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்.

உதாரணத்திற்கு மம்முட்டியும் தேவயானியும் நடித்த மறுமலர்ச்சி படத்தில் மன்சூர் அலிகான் நடித்திருக்கிறார். அப்பொழுது இந்த படத்தின் சூட்டிங் நேரத்தில் மம்முட்டி வாசு விக்ரம் என்பவருக்கு சரியான மரியாதையை கொடுக்காமல் இருந்திருக்கிறார். வாசு விக்ரம் யார் என்றால் சித்தி நாடகத்தில் வேலுமணி என்ற கேரக்டரில் நடித்தவர். அப்படிப்பட்ட இவரை பல மணி நேரமாக உட்காருவதற்கு சேர் கொடுக்காமல் நிக்க வைத்திருக்கிறார்.

Also read: ராஜ்கமல் பிலிம்ஸ்க்கு சென்ற தூது..போன் போட்டு கமலிடம் மம்முட்டி போட்ட போடு

மம்முட்டிக்கு சரியான பாடத்தை கற்பித்த மன்சூர்

இதனை அடுத்து மம்முட்டி அடுத்த படப்பிடிப்புக்கு போயிட்டு வந்திருக்கிறார். அந்த நேரத்தில் மன்சூர் மம்முட்டி இருந்த சேரை தூக்கிட்டு வந்து காலுக்கு போட்டு விட்டார். அதன் பின் திரும்பி வந்த மம்முட்டிக்கு சேர் இல்லாததால் மொத்த யூனிட்டும் மன்சூர் அலிகானை பார்த்து அந்த சேரை கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு மம்முட்டிக்கு கொடுக்க முடியாது என்று மறுத்திருக்கிறார்.

காரணம் சேர் இல்லாமல் நிற்பது எந்த அளவுக்கு ஒரு அவமரியாதையாக இருக்கும் என்று மம்முட்டி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக மன்சூர் அலிகான் இந்த மாதிரி பண்ணி இருக்கிறார். இவர் இதற்காகத்தான் பண்ணி இருக்கிறார் என்று மம்முட்டியும் யூனிட்டில் இருப்பவர்களும் புரிந்து கொண்டார்கள். அந்த வகையில் சக நடிகர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்று மம்முட்டிக்கு பாடத்தை கற்பித்திருக்கிறார் மன்சூர்.

இப்படிப்பட்டவரா கெட்டவரா இருக்க முடியும். எத்தனையோ பேர் சினிமாவில் பல தில்லாலங்கடி வேலைகளை செய்து கொண்டு கமுக்கமாக இருக்கும் சமயத்தில் இவர் பேசியது  சர்ச்சையாக்கியதை ஜீரணிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. மன்சூர் அலிகானை பொறுத்தவரை பார்க்க தான் கோமாளியாக இருப்பது போல் தெரியும். ஆனால் உண்மையாகவே இவருடைய மனசு சொக்கத்தங்கம் தான்.

Also read: மன்சூர் அலிகான் போல் வம்பில் சிக்கிய ரஜினி.. உங்க வயசுக்கு இப்படி பேசலாமா தலைவரே.!