அவர் பாணியில் மன்னிப்பு கேட்ட மன்சூர்.. குதர்க்கமாக குத்தி காமிச்ச திரிஷாவின் சேட்டை

Mansoor and Trisha: மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி அவதூறாக பேசியதால் த்ரிஷா பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு ட்விட் போட்டிருந்தார். இந்த சூழலில் திரிஷாவிற்கு சப்போர்ட்டாக பல பிரபலங்களும் போர்க்கொடியை தூக்கினார்கள். இதனை அடுத்து நடிகர் சங்கத்திலிருந்து மன்சூர் அலிகான் பேசியது தவறு என்று கண்டனம் தெரிவித்து இருந்தார்கள்.

இப்படி தொடர்ந்து மன்சூர் அலிகான் பேசியது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி வெடித்தது. அடுத்து மகளிர் ஆணையத்தில் இருந்து இவர் மீது புகார் தொடுத்து வழக்கு பதிவு வேண்டுமென்று ஒரு பக்கம் போராட்டங்கள் கிளம்பியது. இதனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி பேசியது தவறுதான் என்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் கூறினார்கள்.

ஆனால் மன்சூர் அலிகான் விடாப்படியாக என்னால் மன்னிப்பு கேட்கவே முடியாது. நான் எந்த தவறான அர்த்தத்திலும் அவரை பேசவில்லை. என்னைப் பற்றி என்னுடைய தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அவர்கள் எப்போதும் எனக்கு தான் சப்போர்ட்டாக நிற்பார்கள் என்று கூறியிருந்தார். ஆனால் தொடர்ந்து பிரச்சினைகள் கிளம்பியதால் மன்சூர் அலிகானுக்கு வேறு வழி இல்லை மன்னிப்பது தான் கேட்டாக வேண்டும்.

Also read: இதோட நிறுத்திக்கங்க! இல்லனா பிரளயமே வெடிக்கும் என எச்சரிக்கும் மன்சூர் அலிகான்

அதனால் மன்சூர் அலிகான் என் சக திரை நாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு என்று நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனை அடுத்து மன்சூர் மன்னிப்பு கேட்டதற்கு த்ரிஷா குதர்க்கமாக ஒரு பதிலடி கொடுக்கும் விதமாக ட்விட் போட்டு இருக்கிறார். அதாவது தவறு செய்வது மனித குணம் மன்னிப்பது தெய்வ குணம் என்று போட்டு கையெடுத்து கும்பிடும் மாதிரி ஒரு இமோஜியை போட்டு இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

இன்னொரு பக்கம் இவரின் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள். எதுக்கு உங்களுக்கு இந்த வெட்டி வாய்சவடால் எல்லாம், உங்களுக்கு எல்லாம் வாய் இல்லனா நாய் தூக்கிட்டு போயிடும் என்று. அதாவது நான் மன்னிப்பே கேட்க மாட்டேன் நான் பேசியது தவறு இல்லை என்று ஆணித்தரமாக நம்பிய மன்சூர் தற்போது மன்னிப்பு கேட்டதை பார்க்கும் பொழுது அவர் நயவஞ்சகத்துடகத்தான் பேசி இருக்கிறார் என்று மன்சூரை கலாய்த்து வருகிறார்கள். எது எப்படியோ மன்சூர் மீது திரும்பிய சர்ச்சை தற்போது சுமூகமாக முடிந்து விட்டது.

குதர்க்கமாக ட்விட் போட்ட த்ரிஷா

trisha tweet for mansoor
trisha tweet for mansoor

Also read: பன்னீரில் குளித்து, தங்கத்தட்டில் சாப்பிட்டவருக்கே அப்படி ஒரு நிலைமை.. இதில் மன்சூர் எல்லாம் ஜுஜிபி