டாடா ஹீரோயினை மணக்கும் மஞ்சுமல் பாய்ஸ் நடிகர்.. இணையத்தில் வைரலாகும் கல்யாண பத்திரிக்கை

Dada : விஜய் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான பீஸ்ட் படத்தில் நடித்தவர் அபர்ணா தாஸ். இந்த படத்தில் கதாநாயகியை காட்டிலும் இவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து படங்களில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. அவ்வாறு விஜய் டிவி கவின் மற்றும் அபர்ணாதாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான டாடா படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இப்போதும் அவருக்கு பட வாய்ப்பு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் நடித்த நடிகர் ஒருவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

அபர்ணாவை கரம் பிடிக்கும் மஞ்சுமல் பாய்ஸ் தீபக்

aparna-das-deepak
aparna-das-deepak

அபர்ணா தாஸுக்கு விரைவில் திருமணம்

மலையாள சினிமாவில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் மஞ்சுமல் பாய்ஸ் கவர்ந்து வசூலை வாரிக் குவித்தது.

இப்படத்தில் நடித்த தீபக் பரம்பொருள் என்பவரை தான் அபர்ணாதாஸ் வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி கேரளாவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே மனோகரம் என்ற படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர்.

அப்போதிலிருந்தே இருவரும் காதலித்து வந்த நிலையில் விரைவில் திருமண பந்தத்தில் இணை இருக்கின்றனர். இவர்களது திருமண பத்திரிக்கை இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது.

இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரம்பொருள் இருவருக்கும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய சினிமா செய்திகள்