உளறி தள்ளிய மஞ்சு வாரியர்.. கடுப்பில் ஹெச்.வினோத்தின் பட குழு

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி விஜயின் வாரிசு படத்தின் ரிலீஸின் போது ஒன்றாக ரிலீசாக உள்ளது. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கிய இப்படத்தை போனி கபூர் தயாரித்த நிலையில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் திரையரங்கு விநியோகஸ்தர் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வாங்கி திரையரங்குகளுக்கு விநியோகம் செய்துள்ளது.

இப்படத்தில் சமுத்திரக்கனி, பிரேம், மஞ்சு வாரியார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் சக்கைபோடு போட்டு வருகிறது. அஜித் இப்படத்திற்காக எந்த ஒரு ப்ரோமோஷன் வேலைகளிலும் ஈடுபடவில்லை. ஆனால் இப்படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத்தும், படத்தின் நாயகி மஞ்சு வாரியரும் தனித்தனியாக சென்று பேட்டிகளில் துணிவு படம் குறித்து பேசி வருகின்றனர்.

Also Read: துணிவு படத்தில் பட்டையை கிளப்பிய மஞ்சு வாரியர்.. செல்லப் பெயர் வைத்த அஜித்

அந்த வகையில் நடிகை மஞ்சு வாரியர் ஒரு பேட்டியில் துணிவு படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து உளறியுள்ளார். ட்ரைலரில் மஞ்சு வாரியர் மிகவும் ஸ்டைலாகவும், துப்பாக்கிகளை கையில் வைத்து மாஸாக எதிரிகளை சுட்டு வீழ்த்தி அஜித்துடன் வருவது போல் கட்டப்பட்டிருந்தது. மேலும் கடலில் ஜெட் படகை ஒட்டிக்கொண்டு செல்லும் காட்சிகளும் பார்ப்பதற்கு பிரம்மிப்பாக இருந்தது.

இதனிடையே இப்படத்தில் நடிக்க வந்த போது துப்பாக்கி கூட பிடிக்க தெரியாமல், அஜித்திடம் வெட்கமே இல்லாமல் போய், துப்பாக்கி பிடிக்க தெரியவில்லை கற்றுக்கொடுக்குறீர்களா என்று மஞ்சு வாரியர் கேட்டாராம். துப்பாக்கி பிடிப்பது எப்படி என பல படங்களில் தான் பார்த்துள்ளேன், ஆனால் துணிவு படத்தில் வரும் எனது கதாபாத்திரம் பல வருடங்களாக துப்பாக்கி பயிற்சியுடன் வலம் வருபவர் என தெரிவித்தார்.

Also Read: அந்த படம் மட்டும் ஓடலன்னா என்னுடைய கேரியர் எப்பவோ காலி.. சீக்ரெட் உடைக்கும் மஞ்சு வாரியர்

மேலும் இப்படத்தில் கண்மணி என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக மஞ்சு வாரியர் சிரித்துக்கொண்டே தன் கதாபாத்திரத்தின் பெயரை உளறியுள்ளார். அஜித் போன்ற முன்னணி பட நடிகர்களின் படத்தில் நடிப்பவர்கள், தங்களது கதாபாத்திரத்தை படம் ரிலீசாகும் வரை ஒருபோதுமே எங்கும் வெளிப்படுத்திவிட கூடாது என்பது அவர்களுக்கு கொடுக்கப்படும் விதிமுறைகளாகும்.

அப்படி அவர்கள் தெரியாமல் உளறும் பட்சத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையும் என்பது படக்குழுவின் எண்ணம். இப்படி இருக்கும் பட்சத்தில் மஞ்சு வாரியர் தன் கதாபாத்திரத்தை ஒன் லைன் ஸ்டோரியாக விளக்கியது, துணிவு படக்குழுவை அதிர்ச்க்குள்ளாகியுள்ளது. தற்போது மஞ்சு வாரியரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகியுள்ளது.

Also Read: விஜயை ஒழித்து அவர் சாதனையை தடுக்க வேண்டும்.. பகடைக்காயான அஜித்.!

- Advertisement -