குட்டப் பாவாடையில் பள்ளிப் பருவ பெண்ணாக மாறிய மஞ்சு வாரியர்.. 42 வயசுன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க!

manju
manju

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் மஞ்சு வாரியர். கமர்சியல் நாயகியாக கலக்கிக் கொண்டிருந்த மஞ்சுவாரியர் சமீபகாலமாக கதையின் நாயகியாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் மஞ்சுவாரியர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் நடித்த திரைப்படம் பிரதீ பூவன்கோழி. இந்த படத்தில் பேருந்துகளில் சில்மிஷம் செய்யும் நபர்களை எச்சரிப்பது போன்ற திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இதனால் நாயகி என்னென்ன சிக்கல்களை சந்திக்கிறார் என்பது போல படம் உருவாகி இருந்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் மஞ்சு வாரியர் நடித்த அசுரன் திரைப்படம் தேசிய விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அசுரனுக்கு ஏத்த தைரியமான பெண் வேடத்தில் நடித்த மிரட்டிருந்தார்.

இந்த நடிகர் நடிகைகளுக்கு மட்டும் எப்படி வயது ஆக ஆக இளமை மீண்டும் வருகிறது என்பதே தெரியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் மஞ்சு வாரியர் ஒரு விழாவுக்கு செல்லும் போது பள்ளி குழந்தை போல உடையணிந்து சென்றுள்ளார்.

அதைப் பார்த்ததும் மஞ்சு வாரியாருக்கு பதினாறு பதினேழு வயதுதான் இருக்கும் என்பது போல ரசிகர்களுக்கு தோன்றியுள்ளது. அந்த அளவுக்கு உடல் எடையை குறைத்து சிக்கென்று மாறியுள்ளார் மஞ்சு வாரியர்.

manjuwarrier
manjuwarrier
Advertisement Amazon Prime Banner