யோகா செய்யும் கொழுக் மொழுக் மஞ்சிமா மோகன்.. வைரல் புகைப்படம்!

அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான மஞ்சிமா மோகனுக்கு முதல் படத்திலேயே தமிழில் ரசிகர்கள் கூட்டம் உருவாகினர். தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

தற்போது, விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடித்து வரும் துக்ளக் தர்பார் படத்திலும், கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் வெற்றி பெற்ற குயின் படத்தின் மலையாள ரீமேக்கிலும் நடிகை மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு ஜாம் ஜாம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பார்த்தவுடனே பிடித்து விடும் அளவிற்கு கொழுக்கு மொழுக்கு என இருக்கும் மஞ்சிமா திடீரென யோகா செய்ய தொடங்கியுள்ளார்.

தற்போது கொரோனா சமயம் என்பதால் ஆன்லைன் மூலமாக யோகா வகுப்புகளை முறையாக கற்று வருகிறார் மஞ்சிமா மோகன். மேலும் விதவிதமாக யோகா செய்துள்ள புகைப்படங்களை பதிவிட்டு தனது யோகா ஆசிரியருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

manjima-mohan
manjima-mohan
- Advertisement -