அன்றே கணித்த மணிவண்ணன்.. பிக்பாஸால் வெளிவந்த கமலின் உண்மையான அம்பி நிறம்

Kamal’s True Colour: பிக்பாஸ் தற்போது ஏழாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்பாக நடந்த ஆறு சீசன்களும் எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணம் கமல் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் இப்போது அவர் இந்த நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்ற எதிர்ப்புகள் தான் அதிகமாக இருக்கிறது. அந்த அளவுக்கு அவர் ஒருதலை பட்சமாக நடந்து வெறுப்பை சம்பாதித்து இருக்கிறார். எதற்கெடுத்தாலும் நீதிடா, நேர்மைடா என பேசும் அவர் இந்த சீசனில் அதை கடைபிடிக்காதது ஆச்சரியம் தான்.

தன்னுடைய அரசியல் லாபத்திற்காகவும், தன்னைச் சார்ந்த மக்களுக்காகவும் மட்டுமே அவர் இந்த மேடையை பயன்படுத்தி வருகிறார். மக்களின் கருத்துக்களையோ, நியாயத்தையோ அவர் கண்டு கொள்வதில்லை. இதுதான் உலக நாயகனின் உண்மையான நிறம்.

Also read: ஆண்டவரால கூட இந்த சீசனை காப்பாத்த முடியல.. 70 நாளாகியும் ஒரு ஆணியும் புடுங்காத பிக்பாஸ்

அன்றே கணித்த மணிவண்ணன்

இதை இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் பல வருடங்களுக்கு முன்பே கணித்திருக்கிறார். அந்த வீடியோ தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது அவர் ஒரு மேடையில் கமல் தமிழனும் கிடையாது. இந்தியனும் கிடையாது தேவைப்பட்டால் பெரியார் பற்றி பேசுவார்.

நீங்க எல்லாரும் ஜாக்கிரதையா இருக்கணும். ஏன்னா அவர் ஒரு ஐயங்கார் அதனால் தான் விஸ்வரூபம், தசாவதாரம் என்று படம் எடுத்தார். ஏன் மற்ற கடவுள்கள் யாரும் அவதாரமே எடுக்கவில்லையா என்று அந்த வீடியோவில் வெளுத்து வாங்கி இருப்பார்.

இதை தற்போது ட்ரெண்ட் செய்து வரும் பிக்பாஸ் ரசிகர்கள் நிக்சனுக்கு ஆதரவாக வடசென்னை மேட்டரை கையில் எடுத்ததும் அரசியல் லாபம் தான். அதேபோன்று மாயாவுக்கு ஆதரவாக இருப்பதும் தன் குடும்பத்துக்கு நெருங்கியவர் என்பதால் தான்.

Also read: இனி என்னோட பாதை சிங்கப் பாதை.. வெறியோடு களமிறங்கும் பிக்பாஸ் வீட்டின் புது கேப்டன்

இதன் மூலம் அவர்கள் இருவரையும் கமல் இறுதிப் போட்டி வரை கொண்டு சென்று விடுவார். இதுதான் அவருடைய உண்மையான நிறம். ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை தனக்கானதாக மாற்றி இருக்கும் கமல் இந்த சீசனுடன் விடை பெற்றுக் கொள்வதே நல்லது. இல்லையென்றால் இருக்கும் பெயரும் டேமேஜ் ஆகும் அபாயமும் இருக்கிறது.