மணிவண்ணன் நக்சலைட் ஆதரவாளரா.! திடுக்கிடும் தகவலை வெளியிட்ட பிரபலம்

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் மணிவண்ணன். பாரதிராஜா இயக்கத்தில் 1980 இல் வெளியான நிழல்கள் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமானார் மணிவண்ணன். இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

அதன் பிறகு மீண்டும் மணிவண்ணன், பாரதிராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் வசனம் எழுதினார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு மணிவண்ணன் 1982 இல் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குனரானார். இப்படத்தை தொடர்ந்து 15 ஆண்டுகளுக்குள் கிட்டத்தட்ட 40 படங்களை இயக்கியுள்ளார்.

மணிவண்ணன் இளமைக் காலங்கள், 24 மணி நேரம், நூறாவது நாள், சின்னத்தம்பி பெரியதம்பி, வாழ்க்கைச்சக்கரம், பாலைவன ரோஜாக்கள், இனி ஒரு சுதந்திரம் ஜல்லிக்கடடு, புது மனிதன் என காதல், ஆக்ஷன், கிரைம், த்ரில்லர், குடும்ப உறவுகள், சமூக பிரச்சினை, அரசியல் என பல வகைமைகளில் வணிக வெற்றியைப் பெற்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

மணிவண்ணன் இயக்குனர் மட்டுமல்லாமல் 400க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தான் இயக்கிய படங்களைப் போலவே நடித்த படங்களிலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் முற்போக்கு பார்வையையும் தன்னுடைய பகுத்தறிவு கொள்கைகளையும் வசனங்களாக வெளிப்படுத்த மணிவண்ணன் தயங்கியதில்லை.

மணிவண்ணன் கடந்த 2013 இல் அவருடைய 58வது வயதில் மாரடைப்பால் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இந்நிலையில் நடிகராக இருந்து தற்போது பத்திரிகையாளராக வலம் வரும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் மணிவண்ணனை பற்றிய பல தகவல் கூறியுள்ளார்.

குறிப்பாக மணிவண்ணன் கல்லூரி காலத்திலேயே நக்சலைட் உடன் தொடர்பில் இருந்தவர். மஜூந்தார் என்கிற நக்சலுடன் தொடர்பில் இருந்ததாக அவரே என்னிடம் கூறியுள்ளார் என்று பயில்வான் கூறியுள்ளார். மணிவண்ணன் உயிரோடு இருக்கும்போது இதைப் பற்றி சொல்லாமல் தற்போது அவரைப் பற்றி தப்பாக பேசுவது எந்த வகையில் ஏற்க முடியும் என பயில்வான் ரங்கநாதனை பலரும் திட்டி வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்