மனிதன் vs நாயகன் உண்மையில் ஜெயித்தது யார்? உண்மையை புட்டு புட்டு வைத்த தயாரிப்பாளர்

இன்றைய தமிழ் சினிமாவில் நடிகர்கள் அஜித் மற்றும் விஜயின் ரசிகர்கள் எப்படி மோதி கொள்கிறார்களோ அதே போன்று தான் 20, 30 வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களும் இருந்தார்கள். இருவரின் படங்களில் யாருடைய படம் அதிக நாள் ஓடுகிறது, அதிக வசூல் செய்கிறது என்பது போன்ற பெரிய பிரச்சனை அப்போது இருந்தது. ஆனால் இப்போதைய டெக்னாலஜி அந்த காலத்தில் இல்லாததால் யாராலும் அதை சரியாக கணிக்க முடியவில்லை.

இதனாலேயே ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம் எங்கள் தலைவரின் படம் தான் ஹிட் என்று சொல்லிக் கொண்டும், கமலஹாசன் ரசிகர்கள் ஒரு பக்கம் கமலின் படம் தான் ஹிட் என்று சொல்லிக் கொண்டும் சுற்றி வந்தனர். இந்த சர்ச்சையில் அதிகமாக இன்று வரை பேசப்பட்டு வரும் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மனிதன் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் தான்.

Also Read:தென்னிந்திய சினிமாவை மிரட்டிய இந்தியன் 2.. இதுவரை எந்த படமும் செய்யாத சாதனை

மனிதன் மற்றும் நாயகன் திரைப்படம் அக்டோபர் 21 1987 ஆம் வருடம் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் நாயகன் திரைப்படத்தை பார்த்தால் அது ஒரு வகையான கிளாசான திரைப்படம், மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியானது. ரஜினிகாந்தின் மனிதன் திரைப்படம் கமர்சியல் திரைப்படம். இதில் மனிதன் தான் வெற்றி பெற்றது என்று ஒரு பக்கமும், நாயகன் தான் வெற்றி பெற்றது என்று ஒரு பக்கமும் இன்று வரை விவாதங்கள் தெரிந்து கொண்டே இருந்தன.

தற்போது இந்த சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் படம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் கேட்டுக் கே டி குஞ்சுமோன் சொன்ன விஷயம் ஒன்று வைரலாகி வருகிறது. நாயகன் திரைப்படம் மிகப்பெரிய கிளாஸான திரைப்படம். இந்த படம் ஆஸ்கார் விருது வரை சென்று வந்தது. படத்தை தயாரித்தவர் முக்தா சீனிவாசன். அவர் தயாரித்திருந்தாலும் பிரபல தயாரிப்பாளர் கே டி குஞ்சு மோனின் பண உதவியுடன் தான் நாயகன் படம் வெளியாகி இருக்கிறது.

Also Read:கேரியரை சோலி முடிக்கும் நேரம் வந்தாச்சு.. அசால்டாக 50 கோடி கொடுக்க தயாராகும் சல்மான் கான், ரஜினி

வெளிப்படையாக பார்க்கப்பட்டால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனிதன் திரைப்படம் சில நாட்கள் தான் திரையரங்குகளில் ஓடியது. ஆனால் உலகநாயகன் கமலஹாசனின் நாயகன் திரைப்படம் 175 நாட்கள் வரை ஓடி சாதனை பெற்றது என்று தான் சொல்வார்கள். ஆனால் நாயகன் திரைப்படம் அத்தனை நாட்கள் தியேட்டரில் ஓடியே மொத்தம் 24 லட்சம் தான் வசூலித்திருக்கிறது. ஆனால் மனிதன் படம் வெறும் 31 நாட்களில் 18 லட்சம் வசூல் செய்ததாம்.

இதனால் தயாரிப்பாளருக்கு கிட்டத்தட்ட 50,000 வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதை பொருத்தவரைக்கும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனிதன் திரைப்படம் தான். நாயகன் படத்தின் கதை மற்றும் அதற்கு கிடைத்த வரவேற்பை மனதில் வைத்து இன்றுவரை நாம் நாயகன் படம் தான் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் வெற்றி பெற்றது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

Also Read:கமலுக்கு நோ சொன்ன ரஜினிகாந்த்.. அதுவும் இந்த டாப் இயக்குனரை நழுவவிட்ட சோகம்!

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -