400 கோடி பொன்னியின் செல்வன் சீக்ரெட்டை கசியவிட்ட பொடிப் பையன்.. கடுப்பில் மணி சார்

மணிரத்தினம் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். லைக்கா நிறுவனமும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகின்றனர்.

மேலும் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இதனுடைய முதல் பாகத்திற்கு ps1 என பெயர் வைத்துள்ளனர். மேலும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

மேலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார் ஐஸ்வர்யா ராய். ஆனால் ஐஸ்வர்யா ராய்க்கு என்ன கதாபாத்திரம் என்பது நீண்ட நாட்களாக தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் மாரி 2, பவர் பாண்டி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிறுவன் ராகவன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யாராயுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் அதில் ஐஸ்வர்யா ராய், நந்தினி தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் செம சீக்ரெட்டாக உருவாகி வந்த ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரத்தை இப்படி ஒரு பொடிப் பையன் லீக் செய்து விட்டானே என மொத்த படக்குழுவும் அப்செட்டில் உள்ளதாம்.

மேலும் மணிரத்தினம் முதற்கொண்டு படத்தை தயாரிக்கும் பல முக்கிய பிரபலங்களும் அந்த சிறுவனை தொடர்புகொண்டு எச்சரிக்கை விடுத்ததாக தெரிகிறது. சமீபத்தில் ps1 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

aiswarya-rai-master-ragavan-ps1
aiswarya-rai-master-ragavan-ps1
- Advertisement -