
பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து மணிரத்னம் எடுத்துவந்த பொன்னியின் செல்வன் படத்தின் நிலைகண்டு தயாரிப்பு நிறுவனம் 800 கோடியை செலவழித்துவிட்டு கண்ணீர்விட்டு கொண்டிருக்கிறதுதான் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகமே பாகுபலி படங்களை புகழ்ந்து பேசிய நிலையில் என்னாலும் அப்படி படம் எடுக்க முடியும் என களம் இறங்கியவர் தான் மணிரத்னம். கிட்டத்தட்ட பத்து வருடத்திற்கும் மேலாக பொன்னியின் செல்வன் கதையை வைத்துக்கொண்டு தடுமாறிக் கொண்டிருந்தார்.
முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் மகேஷ்பாபு ஆகிய இருவரையும் வைத்து இந்த படத்தை எடுக்கலாம் என ஆரம்பத்தில் முடிவு செய்த மணி, காலம் கடந்த பின் தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகர்களாக வலம் வரும் ஜெயம் ரவி, கார்த்தி போன்றோரை வைத்து எடுத்து வருகிறார்.
800 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் 75% முடிந்த நிலையில் தற்போது மீண்டும் படத்தை நிறுத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தால் மற்ற படங்களில் நடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நடிகர்கள் இதற்கு மேலும் தாங்க முடியாது என விலக ஆரம்பித்து விட்டார்களாம்.
தற்போது கொரானா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் அம்பாசமுத்திரம் பகுதியில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் படப்பிடிப்புகள் நடத்த இருந்ததை நிறுத்திவிட்டாராம் மணிரத்னம்.
இதனால் மணிரத்னத்தை நம்பி 800 கோடி பணத்தை போட்டு விட்டு படம் வருமா வராதா என கத்தி மேல் நடந்து கொண்டிருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம். இருந்தாலும் மணிரத்னம் சொந்த காசை கொஞ்சம் போட்டிருப்பதால் சும்மா இருக்கிறதாம் அந்த நிறுவனம்.
