பொன்னியின் செல்வணுக்காக படாத பாடுபடும் மணிரத்தினம்.. சும்மாவா அவரெல்லாம் ரொம்ப பிசி

மணிரத்னம் ரோஜா படத்தின் மூலம் ஏ ஆர் ரஹ்மானை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பிறகு திருடா திருடா, பம்பாய், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ராவணன், கடல், செக்கச்சிவந்த வானம் என பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.

தற்போது மணிரத்னம் இயக்கிவரும் படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பலர் நடித்து வருகின்றனர். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்திலும் ஏஆர் ரகுமான் தான் இசையமைக்கவுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் ஒன்றரை ஆண்டு காலமாக துபாயில் தான் இருப்பாராம். ஏ ஆர் ரஹ்மானுக்கு அமெரிக்காவில் 6 முதல் 7 மாதங்கள் கச்சேரி உள்ளதாம். இதனால் துபாயிலிருந்து அமெரிக்கா செல்வதற்கு வசதியாக இருக்கும் என்பதால் துபாயிலேயே தங்கியுள்ளார் ரஹ்மான்.

சும்மாவே ஏ ஆர் ரகுமான் இந்தியா பக்கம் வர மறுக்கிறார். அதில் வேறு கூடிய விரைவில் துபாயில் அரசாங்கம் அவருக்கு கோல்டன் விசா கொடுக்கப் போகிறார்களாம். இப்படி வேற தமிழ்நாட்டின் ஆஸ்கர் நாயகனை கவர்ந்து வருகிறார்கள்.

அங்கேயே பொன்னியின் செல்வன் படத்திற்கான வேலையை ரகுமான் பார்த்து வருகிறாராம். இதனால் மணிரத்தினம் இப்படத்தின் பாடல் எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக அங்கேயும், இங்கேயும் அலைந்துகொண்டு இருக்கிறாராம்.

எப்போதும் போல மணிரத்னம், ஏ ஆர் ரஹ்மான் காம்போவில் வரும் பாடல்கள் போல் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்களும் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படத்தில் எல்லா வேலைகளும் முடிந்தவுடன் கோடை விடுமுறையில் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.