3 குண்டு போட்டும் உயிர் தப்பிய மணிரத்தினம்.. ஒரே படத்தில் சர்ச்சையான சம்பவம்

தமிழ்நாடு அளவில் ஜாதி அரசியல் நடப்பது என்றால் இந்திய அளவில் மத பிரச்சனைகளை வைத்து அரசியல் தற்போது வரை நடைபெற்று தான் வருகிறது.  இதேபோல் ஜாதி மதத்தை வைத்து இயக்குனர்கள் வெற்றிகளையும் கண்டுள்ளனர். அப்படி 1995ஆம் ஆண்டு வெளிவந்து மிக பிரம்மாண்ட வெற்றி பெற்ற படத்தை பற்றி தற்போது பார்க்கலாம்.

மணிரத்னம் இயக்கத்தில் 1995 இல் வெளியான திரைப்படம் பம்பாய். இப்படத்தில் அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இப்படம் 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டது.

இப்படத்தில் இந்து மதத்தை சேர்ந்த அரவிந்த்சாமியும், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மனிஷா கொய்ராலா இருவரும் காதலித்து, குடும்ப விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டு பாம்பேயில் வாழ்கிறார்கள். இவர்களுக்குப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு இரு மதங்களையும் சொல்லி கொடுத்து வளர்க்கிறார்கள்.

அப்போதுதான் கலவரம் வெடிக்கிறது. நிறைய உணர்ச்சிகரமான தருணங்களுக்குப் பிறகு இறுதியில் மனிதசங்கிலியுடன் படம் முடிகிறது. மதங்களுக்கிடையேயான காதல் கதை, முஸ்லிம்களின் கலாச்சாரம் மற்றும் மதத்தை அவமதிப்பதாக முஸ்லிம் தலைவர்கள் அப்போது குற்றம் சாட்டினார்கள்.

இதனால் இந்து, முஸ்லீம் இடையே வன்முறை ஏற்படுத்தும் விதமாக இப்படம் உள்ளதாக இயக்குனர் மணிரத்தினம் வீட்டில் வெடி குண்டுகள் வீசப்பட்டது. சென்னையில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டின் வெளியே உள்ள முற்றத்தில் மணிரத்னம் காலை காபி குடிக்கும் பொழுது சக்தி வாய்ந்த கச்சா குண்டுகள் வீசி உள்ளார்கள்.

இதில் மணிரத்னம் அருகில் விழுந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை. இதனால் அவர் நூல் இலையில் உயிர்தப்பித்து இருந்தார். மூன்று வெடிகுண்டு வீசியதில் மணிரத்தினத்திற்கு காலில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த செய்தி அப்போதைய சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு இருந்தது.

இப்படி இந்திய அளவில் நடந்த மத பிரச்சினையை வெளிக்கொண்டு வந்த மணிரத்னத்தை தற்போது வரை தமிழ் சினிமா கொண்டாடி வருகின்றனர். தற்போது உள்ள தலை முறைக்கு ஏற்றவாறு தனது படத்தின் ஸ்டைலை மாற்றுவது கைவந்த கலையாக வைத்திருக்கும் ஒரே இயக்குனர் இவரே என்று கூறினால் அது மிகையாகாது.