ஓரவஞ்சனை செய்யும் மணிரத்னம்.. கமலுக்கு மட்டுன்னா, அப்ப நாங்க எல்லாம் டம்மியா?

Kamal Haasan – Thuglife: பொதுவாக நிறைய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களில் கமிட்டாகும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒரு பெரிய சிக்கல் இருக்கும். அதாவது நிறைய பெரிய நடிகர்கள் இருப்பதால் நமக்கு அதில் முக்கிய ரோல் இருக்குமா, அவர்களை தாண்டி நம் முகங்கள் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆகுமா என்ற பிரச்சனை தான். அதிலும் கமல் படம் என்றால் கேட்கவே வேண்டாம், அவர் ஆடியன்ஸ்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் இருப்பதில் வல்லவர்.

கமலுடன் நடிப்பதற்கு நிறைய நடிகர்கள் யோசிப்பது இதனால் தான். இந்தியன் 2 பட வேலைகளை கமல் செய்து கொண்டிருக்கும் போதே அடுத்தடுத்து தன்னுடைய 233 மற்றும் 234 ஆவது படங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 33 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் படம் உருவாகப் போகிறது என்ற அறிவிப்பு வெளியானது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக மாறிவிட்டது.

தக்லைஃப் படத்தில் கமலுடன் இணைந்து ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் பூஜை நடந்து முடிந்து சென்னையில் ஒரு சில நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கமல் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுப்பதற்காக பட குழு செர்பியா நாட்டிற்கு விரைந்து இருக்கிறது.

Also Read:கமல் படம்ன்னா கண்டிப்பா இந்த நாலு பேர் இருப்பாங்க.. குருதிப்புனல் முதல் தக்லைஃப் வரை நடிக்கும் ஜாம்பவான்

இந்தியன் 2 பட வேலைகளுக்காக அமெரிக்காவில் இருக்கும் கமல் அதை முடித்துவிட்டு ஆறு நாள் கால் சீட்டில் செர்பியாவுக்கு செல்கிறாராம். அதைத் தொடர்ந்து யூகஸ்லோவியா நாட்டிலும் கமல் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறதாம். இதில் முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த வெளிநாடு படப்பிடிப்பு எதிலுமே ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா கிடையாது.

ஓரவஞ்சனை செய்யும் மணிரத்னம்

கமல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இந்த இரண்டு நாடுகளில் எடுக்கப்பட்ட பிறகு படம் முழுக்க முழுக்க இந்தியாவில் தான் படமாக்கப்படுகிறது. கமலுக்கு மட்டும் வெளிநாட்டில் ஷூட்டிங்கை வைத்துவிட்டு, மற்ற நடிகர்களுக்கு இந்தியாவில் தான் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. இது என்ன கமலுக்கு மட்டும் மணிரத்தினம் ஓரவஞ்சனை காட்டுகிறார் என்பது போல் தான் தோன்றுகிறது.

வெளிநாட்டில் மற்ற நடிகர்களுக்கு ஷூட்டிங் இல்லை என்றாலும் பரவாயில்லை, இந்தப் படத்தில் ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா போன்றவர்களுக்கு முக்கியமான கேரக்டர் ஆவது இருக்கிறதா, இல்லை டம்மியான கேரக்டர்களில் வந்து விடுவார்களா என்ற சந்தேகம் அவர்களுக்கே இருக்கிறது. த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி போன்றவர்கள் இப்போதுதான் படிப்படியாக வெற்றியை பார்த்து வருகிறார்கள். இது போன்ற சமயத்தில் டம்மியாக இந்த படத்தில் நடித்து விட்டால் மீண்டும் அவர்களது நிலைமை தலைகீழாக மாறிவிடும்.

Also Read:லீக்கான சிவகார்த்திகேயனின் பட டைட்டில்.. SK-21 படத்தில் கைவரிசையை காட்டிய கமல்