த்ரிஷாவை பாலா லெவலுக்கு வச்சு செய்யும் இயக்குனர்.. இங்கே வரதுக்குள்ள அடையாளம் தெரியாமல் போயிடுவாங்க அம்மணி

Manirathnam: மணிரத்னம் ஒரு படத்தை எடுக்கிறார் என்றால் அந்த படம் நிச்சயம் வெற்றி பெற்று விடும். அதிலும் கமல் ஹீரோவாக நடிக்கிறார் என்றால் சொல்லவே தேவையில்லை. தக் லைப் படம் ஒரு சரித்திர படமாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட இப்படத்தில் பல ஹீரோக்கள் இணைந்து நடிக்கிறார்கள்.

முக்கியமாக சிம்பு, த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக் போன்ற பல முன்னணி ஹீரோக்கள் இணைந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்றது. ஆனால் அங்கே ஒரு நாளைக்கு மட்டும் 20 லட்ச ரூபாய் கிட்ட செலவு ஆகுதாம்.

அதனால் இது பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகாது என்று முடிவு பண்ணி மணிரத்தினம் அவசர அவசரமாக படப்பிடிப்பை முடித்திருக்கிறார். விட்ட குறை தொட்ட குறை என்று மீண்டும் எந்த வேலையும் இருக்கக் கூடாது என்பதற்காக ப்ளான் பண்ணி முன்கூட்டியே அனைத்து படப்பிடிப்பையும் அங்கே எடுத்து விட்டார்.

அடுத்த கட்ட ஷூட்டிங் ஸ்பாட்டை தேர்வு செய்த மணிரத்தினம்

கடைசியாக செர்பியாவுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு அங்கே இருந்து மொத்த டீமும் கிளம்பி விட்டார்கள். இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பை ராஜஸ்தானில் வைப்பதற்கு பிளான் பண்ணி இருக்கிறார். ஆனால் இப்பொழுது அங்கே ரொம்பவே ஹார்ட் என்பதால் எப்படி த்ரிஷா மற்றும் கமல் போன்ற நடிகர்கள் தாக்குப் பிடிப்பார்கள் என்ற யோசனையில் மணிரத்தினம் இருக்கிறார்.

ஆனாலும் வேறு வழி இல்லை படப்பிடிப்பை சீக்கிரம் முடித்தாக வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு ஹீரோக்களும் கொடுத்த கால் சீட்டுக்குள் முடித்தாக வேண்டும். அதனால் எந்த வித தயவு தாச்சியமும் பார்க்காமல் மணிரத்தினம் மற்றும் அவர்களுடைய டீம் அனைவரும் ராஜஸ்தானுக்கு போகப் போகிறார்கள்.

இதையெல்லாம் கேள்விப்பட்ட த்ரிஷா கொளுத்தும் வெயிலில் எப்படி தாக்குப் பிடிக்கப் போறேன் என்று புலம்பி கொண்டு வருகிறார். ஆனால் இந்த மாதிரி ஆர்டிஸ்ட்களை எல்லாம் வச்சு செய்யக்கூடிய ஒரே இயக்குனர் பாலா தான். தற்போது இவருடைய லெவலுக்கு இயக்குனர் மணிரத்தினமும் திரிஷாவை படுத்தி எடுக்கிறார். இப்படியே போனால் தக் லைப் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பும் பொழுது ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிடுவார் போல.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்