ரீ ரிலீஸுக்கு தயாராகும் 3 சூப்பர் ஹிட் படங்கள்.. அத்தனையிலும் மாஸ் காட்டும் அரவிந்த்சாமி

தமிழ் சினிமாவில் வித்தியாசமான காதல் கதைகளை இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் வெளியான மௌனராகம், நாயகன், தளபதி, அஞ்சலி, ரோஜா, பம்பாய், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஓ காதல் கண்மணி போன்ற பல படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தற்போது மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார். மணிரத்தினத்தின் பம்பாய் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ராஜீவ் மேனன். இவர் தமிழில் மின்சார கனவு, கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

ராஜீவ்மேனன் பல படங்களை தயாரித்தும் உள்ளார். தற்போது இந்திய விளம்பர இயக்குனராக பணியாற்றி வருகிறார். பம்பாய் படம் இவர் திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைய மீண்டும் மணிரத்னத்துடன் குரு, கடல் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்நிலையில் ராஜீவ் மேனன் புரொடக்ஷன் சார்பாக மணிரத்னத்தின் சூப்பர் ஹிட் 3 படங்களை மறுவெளியீடு செய்ய ராஜீவ்மேனன் திட்டம் வைத்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்முட்டி, அரவிந்த்சாமி, ஷோபனா ஆகியோர் நடிப்பில் 1991 இல் வெளியான திரைப்படம் தளபதி. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதைத்தொடர்ந்து மணிரத்னத்தின் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா ஆகியோர் நடிப்பில் 1992 இல் வெளியான திரைப்படம் ரோஜா. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்ததுடன் மூன்று தேசிய விருதையும் பெற்றது.

அரவிந்த்சாமி மனிஷா கொய்ராலா ஆகியோர் நடிப்பில் 1995 இல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பம்பாய். இப்படமும் மிகப் பெரிய ஹிட்டானது. இந்நிலையில் ரோஜா, பம்பாய், தளபதி ஆகிய மூன்று படங்களையும் மறு வெளியீடு செய்யலாம் என்ற ஒரு பெரிய சவாலை கையில் எடுத்து ராஜீவ் மேனன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பல திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடிய இந்த படங்கள் மீண்டும் ரீ ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பு வெளியான படங்களை புதுப்பொலிவுடன் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.