மணிரத்தினத்தின் மூளைக்கு ஈடு இணையே இல்லை.. ராஜினாமா செய்யப்போகும் ராஜமௌலி

சினிமாவில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக பல தரமான படங்களை கொடுத்து வெற்றி இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக, எழுத்தாளராக பல திறமைகளை கொண்ட இவர் சாதிக்காத சாதனையும் கிடையாது, அடையாத உயரங்களும் கிடையாது.

மேலும் சிறந்த படைப்பிற்காக தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கும் இவர் இப்போது பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று காவியத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இப்படி ஒரு வரலாற்று திரைப்படத்தை யாராலும் எடுக்க முடியாது என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் என்னால் முடியும் என்று அதை மணிரத்னம் நடத்திக் காட்டி இருக்கிறார்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதை பார்த்த பலரும் அந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் என்று சொல்லப்படும் ராஜமவுலியின் படத்துடன் ஒப்பிட்டு பார்த்து பேசி வருகின்றனர். ராஜமௌலி தான் கதை சொல்வதில் சிறந்தவர் என்று பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

ஆனால் அந்த விவாதங்களை பார்க்கும்போது நகைச்சுவையாக தான் தோன்றுகிறது. ஏனென்றால் மணிரத்தினம் என்பவர் ஒரு முழுமையான ஜாம்பவான். அவ்வளவு எளிதில் அவரை ராஜமௌலியுடன் மட்டுமல்ல வேறு எந்த இயக்குனருடனும் ஒப்பிட முடியாது. மணிரத்னம் இயக்கிய படைப்புகளை பார்த்தாலே இப்போது இருக்கும் ரசிகர்கள் அவருடைய திறமை என்ன என்பதை பற்றி புரிந்து கொள்வார்கள்.

ஆரம்ப காலத்தில் தொடர்ச்சியான தோல்வி படங்களை கொடுத்த மணிரத்தினம் ஒரு வெற்றி படத்தை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இயக்கியது தான் மௌன ராகம். காதலின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்திய அந்த திரைப்படம் இன்றும் கூட தமிழ் சினிமாவின் சிறந்த காதல் திரைப்படமாக இருக்கிறது.

அதைத் தொடர்ந்து அவர் ஆக்ஷன், சென்டிமென்ட், சமூக சிந்தனை திரைப்படங்கள் என்று அனைத்திலும் தன் திறமையை வெளிப்படுத்தினார். ட்ரெண்டிங் படங்களை மட்டுமே பார்த்து வந்த சினிமாவில் ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.

அந்த வகையில் இவருடைய திரைப்படத்தில் இடம்பெறும் வசனங்களும், உயிரை உருவ வைக்கும் சென்டிமென்ட் காட்சிகளும், கதாபாத்திரங்களின் நேர்த்தியும் ரசிகர்களை கட்டிப்போட்டது. அது மட்டுமல்லாமல் நட்பு, அரசியல், மத நல்லிணக்கம் என்று இவர் கையாண்ட கதைக்களங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படிக்கட்டுகளாகவே மாறியது.

அதன் காரணமாகவே இவர் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனராக இருக்கிறார். இத்தனை வருடங்கள் கழிந்த பிறகும் கூட இன்றைய தலைமுறைகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இவருடைய திரைப்படம் இருப்பது தான் ஆச்சரியம்.

அப்படிப்பட்ட பெருமைக்குரிய இவரின் திறமையை இயக்குனர் ராஜமௌலியுடன் ஒப்பிட்டு பார்த்து தான் பல விமர்சனங்கள் வருகிறது. அவரும் திறமையான இயக்குனர் தான். ஆனால் அவரின் திரைப்படத்தில் இருக்கும் பிரம்மாண்டமான காட்சிகள் பிரம்மிக்க வைக்கிறதே தவிர ரசிகர்களை உணர்வுபூர்வமாக கவர்வது கிடையாது.

ஆனால் மணிரத்தினத்தின் திரைப்படத்தின் உயிரோட்டமே உணர்வுபூர்வமான காட்சிகள் தான். இதுதான் அவருடைய அடையாளமாகவும் இருக்கிறது. அந்த வகையில் விரைவில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் அவருடைய திறமையை முழுமையாக பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. அந்த படம் வெளிவந்த பிறகு மணிரத்னம் குறித்து ரசிகர்களின் மனநிலை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story

- Advertisement -