சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ராஜமௌலியிடம் கெஞ்சிய மணிரத்தினம்.. 500 கோடிக்கு வச்சான் பாரு ஆப்பு

பொன்னியின் செல்வன் 500 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம். மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான இந்த திரைப்படம் இரண்டு வருடங்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு முடிவடைந்தது. இதன் டீசர் தஞ்சாவூர் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு கடைசியில் சென்னையில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் முக்கிய நபர்கள் கலந்து கொள்ளாத நிலையில் அதாவது ஐஸ்வர்யா ராய், விக்ரம் கலந்து கொள்ளவில்லை, இது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் இத்திரைப்படத்தை பான் இந்தியா திரைப்படமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் டீசர் விழா பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு மணிரத்தனம் கடைசியில் எளிமையாக செய்து முடித்தார். இதுவே படத்தை மக்களுக்கு இந்தியா முழுக்க கொண்டு செல்லவில்லை. இந்த திரைப்படத்தை எப்படி இந்தியா முழுக்க பிரமோஷன் செய்வது என்று குழப்பத்தில் மணிரத்னம் தவித்து வருகிறார்.

தற்போது இருக்கும் சூழலில் தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு மற்ற மாநிலங்களில் ரசிகர்கள் இருந்த காலம் மலையேறி பிற மொழி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். தெலுங்கு இயக்குனர்கள், கன்னட இயக்குனர்கள் படங்கள் தமிழகத்தை வசூல் சாதனை செய்து வருகிறது. இயக்குனர் ஷங்கர் முதற்கொண்டு தெலுங்கு பக்கம் சென்று விட்டார். விஜய் தெலுங்கு பக்கம் சென்று படம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிற மாநிலங்களில் எந்த மறுப்பும் இல்லை. பெரிய பட்ஜெட் படம் என்பதால் பிற மாநிலங்களில் வசூலை பெற்றால்தான் படம் வெற்றி பெற முடியும். இதனடிப்படையில் மணிரத்தினம் சமீபத்தில் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியை தனியாக சந்தித்து பேசியுள்ளார்.

அப்பொழுது உங்களுக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். நீங்கள் பொன்னியின் செல்வன் புரமோஷனுக்கு என்னுடன் இந்தியா முழுக்க பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். நீங்கள் வந்தால் பொன்னியின் செல்வன் அனைத்து மாணவர்கள் எளிதாக வெற்றி பெற முடியும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் ராஜமௌலி உறுதியான பதில் எதுவும் கூறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லாததால் விக்ரமும் பட புரமோஷனில் கலந்து கொள்ள மாட்டார் இந்த நிலையில் இந்தியா முழுவதும் இந்த படத்தின் ப்ரோமோஷன் செய்ய படாத பாடுபட்டு வருகிறார் மணிரத்தினம். மணிரத்தினத்தின் இந்த நிலையை பார்த்து தமிழ் சினிமா வருத்தத்தில் இருக்கிறது.

- Advertisement -

Trending News