சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானுக்கு முழு உருவ சிலையுடன் மணிமண்டபம் கட்டப்படும்.. தமிழக முதல்வரின் அறிவிப்பு!

விரைவில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழக முதல்வர் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது அவர் பேசிய உரையில், ‘சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு ஒற்றனாக செயல்பட்ட வீரன் பொல்லானுக்கு முழு உருவ சிலையுடன் மணிமண்டபம் கட்டப்படும்.

அதுமட்டுமில்லாமல் பொல்லான் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்’ என்ற அசத்தலான அறிவிப்பையும் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

எனவே விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தமிழக முதல்வரின் இத்தகைய அறிவிப்பால் தமிழக மக்கள் தங்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தொடர்ந்து பயனுள்ள திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறார்.

ஆகையால் அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஈடுபடும் பொழுது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்