நடிப்பில் முத்திரை பதித்த மணிகண்டனின் 5 கதாபாத்திரங்கள்.. ராஜாக்கண்ணுவாக வாழ்ந்த கலைஞன்

சில கதாபாத்திரம் நடித்து இருந்தாலும் அவர்களுடைய கேரக்டர் பெரிய அளவில் பேசும் படியாக அமைந்திருக்காது. ஏதாவது ஒரு படத்தில் முக்கியமான கதாபாத்திரம் மற்றும் வரவேற்கப்பட்ட படங்கள் மூலம் அவர்களுடைய திறமை வெளிவரும். அப்படித்தான் சமீபத்தில் நடிப்பில் முத்திரை பதித்து வரும் மணிகண்டனின் கதாபாத்திரங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. அவர் நடிப்பில் வெளிவந்த ஐந்து படங்கள் பற்றி பார்க்கலாம்.

குட் நைட்: விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் நேற்று குட் நைட் திரைப்படம் வெளிவந்தது. இதில் மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது புதிதாக திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி, இவர்களுக்கு திருமணம் முடிந்த பிறகு முதல் இரவு அறைக்கு சென்ற போது கணவர் குறட்டை விட்டு தூங்குகிறார். இதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக வெளியாகி உள்ளது.

Also read: Good Night Movie Review – குறட்டையால் படாத பாடுபடும் மோட்டார் மோகன்.. குட் நைட் பட முழு விமர்சனம்

காலா: பா.ரஞ்சித் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு காலா திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ரஜினி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி மற்றும் மணிகண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் மணிகண்டன் ரஜினியின் இளைய மகனாக லெனின் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். இப்படத்தில் தந்தையின் வன்முறையை விரும்பாத விழித்திரு குழுவின் நிறுவனராக நடித்தார்.

8 தோட்டாக்கள்: ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு 8 தோட்டாக்கள் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் வெற்றி, அபர்ணா பாலமுரளி, எம் எஸ் பாஸ்கர், நாசர் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் துப்பாக்கி தொலைந்து போனதால் அவருக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் மணிகண்டன் ஜெய் கேரக்டரில் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார்.

Also read: காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த குட் நைட்.. இதோ ட்விட்டர் விமர்சனம்

ஏலே: ஹலிதா ஷமீம் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு ஏலே திரைப்படம் வெளிவந்தது. இதில் சமுத்திரக்கனி, மணிகண்டன் மற்றும் தீபா சங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சமுத்திரக்கனியின் பையனாக பார்த்திபன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இப்படம் தியேட்டர்களில் ரிலீசாகாமல் நேரடியாக ஓடிடி மற்றும் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அத்துடன் இப்படத்தில் அவர் மகனாக என்னென்ன கஷ்டங்கள் அனுபவித்தார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்

ஜெய் பீம்: டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு ஜெய்பீம் திரைப்படம் வெளிவந்தது. இதில் சூர்யா, லிஜோமோல் ஜோஸ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நடித்தார்கள். இப்படம் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எதிரான அரசு வன்முறை செய்ததில் அதை எதிர்த்துப் போராடக்கூடிய படமாக இக்கதை அமைந்திருக்கும். இதில் மணிகண்டன் செங்கேணியின் கணவர் ராஜாக்கண்ணுவாக நடித்தார். இவருக்கு காவல்துறையால் ஏற்பட்ட பிரச்சனையிலிருந்து நீதி கிடைக்க போராடும் விதமாக அமைந்திருக்கும். இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று உலக அளவில் பாராட்டு கிடைத்தது.

Also read: பிரதீப்பை ஓரங்கட்ட போகும் மணிகண்டன்.. ஆர்ப்பாட்டம் இல்லாத ஹிட்டுக்கு ரெடியாகும் குட்நைட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்