பிரதீப்பை ஓரங்கட்ட போகும் மணிகண்டன்.. ஆர்ப்பாட்டம் இல்லாத ஹிட்டுக்கு ரெடியாகும் குட்நைட்

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த லவ் டுடே திரைப்படம் மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது. வெறும் ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அப்படம் 150 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது. இதனால் பிரதீப்பின் மார்க்கெட்டும் இப்போது எகிறி உள்ளது.

ஆனால் அவரை ஓரம் கட்டும் அளவுக்கு இப்போது ஒரு ஹீரோ தயாராகி இருக்கிறார். நடிகர், இயக்குனர் என பல பரிமாணங்களை கொண்ட மணிகண்டன் ஜெய் பீம் ராஜாகண்ணுவாக நம்மை வியக்க வைத்தார். இதற்கு முன்பாக அவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் தான் அவரை ஓவர் நைட்டில் பிரபலமாக்கியது.

Also read: முதல் இரவில் குறட்டை விட்டு தூங்கிய மணிகண்டன்.. கலக்கலான காமெடி உருவான குட் நைட்

அதைத்தொடர்ந்து இன்று அவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் நைட் திரைப்படம் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இதன் ட்ரெய்லர் அனைவரையும் கவர்ந்த நிலையில் படத்திற்கான பிரமோஷன் வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் படத்தின் ப்ரிவ்யூ ஷோவை பார்த்த பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களையே கொடுத்தனர்.

அந்த வகையில் இப்படம் லவ் டுடேவை மிஞ்சும் அளவுக்கு மிகவும் எதார்த்தமாகவும், கலகலப்பாகவும் இருக்கிறதாம். அதிலும் மணிகண்டனின் நடிப்பு அவ்வளவு தத்ரூபமாக பலரையும் ரசிக்க வைக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் புகழாரம் சூடி வருகின்றனர்.

Also read: ஒரு நல்ல டர்னிங் பாயிண்டுக்காக காத்திருக்கும் 5 இளம் நடிகர்கள்.. ஜெய் பீம்மோட நிற்கும் மணிகண்டன்

அதனால் இந்த படம் வசூல் ரீதியாக கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற ஒரு பேச்சு இப்போது நிலவி வருகிறது. இதே போல் தான் லவ் டுடே திரைப்படமும் எதிர்பார்க்காத அளவிற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. அது மட்டுமல்லாமல் இளைஞர்கள் கொண்டாடும் படமாகவும் அது இருந்தது.

மேலும் பிரதீப் சில உருவ கேலிக்கு ஆளானாலும் இப்போது அடுத்தடுத்த படங்களில் கெத்து காட்டிக்கொண்டு இருக்கிறார். முன்னணி நடிகர்கள் கூட இவருடைய இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகின்றனர். அதேபோன்று இப்போது மணிகண்டனும் குட் நைட் படத்தால் பிரபலமாகி விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த அளவுக்கு இந்த படம் இப்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

Also read: தத்துரூபமா இருக்கனும் என உயிரைக் கொடுத்து நடிக்கும் 5 நடிகர்கள்.. ராஜா கண்ணாக ஜெயித்து காட்டிய மணிகண்டன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்