அக்கறை காட்டி வைக்கும் ஆப்பு.. கேமை சொதப்பும் ரவீனா, மொத்த வீட்டுக்கும் வில்லனான மணி

Biggboss 7: விஜய் டிவியின் பிரபலங்களான மணி, ரவீனா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல போகிறார்கள் என்றதுமே ரசிகர்கள் குதூகலமாக காத்திருந்தனர். ஏனென்றால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக ஒரு செய்தி அடிபட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் அது 100% உறுதியாகி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்றார் போல் தான் ஒவ்வொரு சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் எதற்கு வீட்டுக்குள் வந்தோம் என்றே தெரியாமல் இவர்கள் இருவரும் கொடுக்கும் அலப்பறை சில விமர்சனங்களுக்கும் ஆளாகி வருகிறது. அதில் முக்கியமானது மணி நடந்து கொள்ளும் விதம் தான்.

ஏனென்றால் இவர் ரவீனாவை பாதுகாக்கிறேன், அக்கறை காட்டுகிறேன் என்ற பெயரில் அவருக்கே தெரியாமல் ஆப்பு வைத்துக் கொண்டிருக்கிறார். அதாவது தன்னுடைய கேமிலும் கவனம் செலுத்தாமல் அவரையும் விளையாட விடாமல் இருக்கிறார். இதனால் இருவரும் விரைவிலேயே ஜோடியாக வீட்டை விட்டு செல்வதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

இத்தனைக்கும் ரவீனா பேசும் பல விஷயங்கள் முதிர்ச்சியுடன் இருக்கிறது. அதனாலேயே அவர் கடுமையான போட்டியாளராக மாறுவார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அவருடைய மொத்த நேரத்தையும் மணி எடுத்துக் கொள்வது மற்ற போட்டியாளர்களின் விளையாட்டுக்கும் இடையூறாக இருக்கிறது.

ஏனென்றால் மணி வேறு யாருடனாவது நேரம் செலவழித்தாலோ அல்லது ரவீனா மற்றவர்களுடன் பழகினாலோ ஆட்டம் சூடு பிடிக்கும். அப்படி இல்லாமல் இருவரும் மணிக்கணக்காக பேசி ஏதோ பார்க்குக்கு வந்தது போல் நேரத்தை கழித்து வருகின்றனர். இதனால் மற்றவர்களின் கவனமும் சிதறுகிறது.

இதன்மூலம் மணி மொத்த வீட்டுக்கும் வில்லனாக மாறி இருக்கிறார். அதனாலயே ரசிகர்கள் இவர் விரைவில் வெளியேறினால் ரவீனாவாவது சரியாக விளையாடுவார் என கூறி வருகின்றனர். சுருக்கமாக சொல்லப்போனால் தானும் படுக்க மாட்டான் தள்ளியும் படுக்க மாட்டான் என்ற கதையாக இருக்கிறது மணியின் அட்ராசிட்டி.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை