மீண்டும் ஒரே திரையில் கமல், ரஜினியை பார்க்க ஆசைப்பட்ட மணிரத்தினம்.. கடைசியில் அந்தர் பல்ட்டி அடித்த ஹீரோ

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இதனால் இந்தப் படத்தை வெளியிடுவதில் மணிரத்தினம் மும்மரம் காட்டி வருகிறார்.

இதைத்தொடர்ந்த மணிரத்தினம் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படத்தை இயக்க ஆர்வமாக உள்ளார். ரஜினிக்கு தளபதி, கமலுக்கு நாயகன் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை மணிரத்தினம் கொடுத்துள்ளார். ஆனால் ரஜினி, கமல் என இந்த இரண்டு மாபெரும் ஜாமவான்களை ஒரே திரையில் பார்க்க மணிரத்தினம் ஆசைப்பட்டார்.

Also Read :பொன்னியின் செல்வனால் மணிரத்தினத்தின் ஷேர் மற்றும் சம்பளம்.. அடேங்கப்பா! தளபதி விஜயை விட ஜாஸ்தியா இருக்கே

ஏற்கனவே ரஜினி, கமல் இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்திருந்தாலும் ஒரு பெரிய ஹீரோக்களுக்கான அந்தஸ்தை பெற்ற பிறகு ஒரே திரையில் நடிக்கவில்லை. இந்த முயற்சியை நாம் மேற்கொள்ளலாம் என மணிரத்தினம் திட்டம் தீட்டி இருந்தார்.

அதேபோல் அடுத்ததாக ரஜினி படத்தை மணிரத்தினம் இயக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் எதிர்பாராத விதமாக கமலின் பிறந்தநாள் அன்று இவரின் 234 வது படத்தை மணிரத்தினம் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

Also Read :கமலின் கனவை நினைவாக்க வரும் நடிப்பு அரக்கன்.. மீண்டும் ஆரம்பமாகும் மருதநாயகம்

இதில் அதிர்ச்சி என்னவென்றால் ரஜினி படத்தை இயக்குவதாக சொல்லிவிட்டு கமல் படத்திற்கான அறிவிப்பு வந்துள்ளது என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதாவது மணிரத்னம் கமல், ரஜினி இரண்டு பேரையுமே ஒன்றாக வைத்த படம் இயக்க ஆசைப்பட்டார்.

இதற்கான கதையைக் கேட்டு கமல் ஒத்துக் கொண்டாலும் ரஜினி பின்வாங்கி விட்டார். கடைசி நேரத்தில் சூப்பர் ஸ்டார் அந்தர் பல்டி அடித்ததால் உலக நாயகனின் படத்தை மணிரத்தினம் இயக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார்.

Also Read :65 ஆண்டுகளாக கமல் சம்பாதித்த மொத்த சொத்து.. லண்டனில் வீடு, சொகுசு காரு என மறைக்கப்பட்ட லிஸ்ட்

- Advertisement -