10 பிரபலங்களுக்கு பல கோடி சம்பளத்தை வாரி வழங்கிய மணிரத்னம்.. முதல் மூன்று இடம் யாருக்கு தெரியுமா.?

மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. அதன் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அந்த படத்தில் நடித்த 10 பிரபலங்களுக்கு மட்டும் பல கோடியை மணிரத்னம் சம்பளமாக வாரி கொடுத்திருக்கிறார். அதிலும் இந்த படத்தில் அதிக சம்பளம் வாங்கிய 3 டாப் நடிகர்களை பற்றி பார்ப்போம். இந்தப் படத்தில் காமெடியனாகவும் அறிவுப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்கும் ஆழ்வார்க் கடியான் நம்பியாக நடித்த ஜெயராமுக்கு 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

Also Read: களை கட்டும் சோழர்களின் வரலாறு.. பொன்னியின் செல்வன் 2 எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

இவரை தொடர்ந்து வானதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவிற்கு 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுந்தர சோழனாக நடித்த நடிகர் பிரகாஷ்ராஜுக்கு 1.5 கோடியும், பெரிய வேளாராக நடித்த நடிகர் பிரபுவுக்கு 1.5 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு 1.5 கோடி சம்பளம் கொடுத்துள்ளனர். படத்தில் மட்டுமல்ல பெண்களின் மனதை வசியம் செய்த வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திக்கு 5.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பேரழகியாக குந்தவை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இளசுகளின் மனதை கொள்ளை அடித்த திரிஷா மொத்தமாக 5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.

Also Read: வம்சத்தை கருவறுக்க காத்திருந்த நந்தினி.. நேருக்கு நேர் சந்தித்த ஆதித்த கரிகாலன், மிரட்டிவிட்ட பொன்னியின் செல்வன் 2

மேலும் அருண் மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு 8 கோடியும், நந்தினி மற்றும் ஊமை ராணி போன்ற இரட்டை கதாபாத்திரங்களில் நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு 10 கோடியும், ஆதித்த கரிகாலனாக மிரட்டிவிட்ட விக்ரமுக்கு 12 கோடியும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிலும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களுக்கும் மொத்தமாக விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி ஆகிய மூன்று பேர் வாங்கிய சம்பளம் மற்ற நடிகர் நடிகைகளை விட பல மடங்கு அதிகம். இவர்கள் மூன்று பேரும் தான் இந்த படத்தில் அதிக சம்பளம் வாங்கிய பிரபலங்கள்.

Also Read: 14 வருடத்திற்கு முன்பே விஜய் சூர்யாவிற்கு மணிரத்னம் கொடுத்த ஆஃபர்.. தட்டிக் கழித்து வருந்தும் 10 பிரபலங்கள்

- Advertisement -