ராஜமௌலியை பின்பற்றும் மணிரத்தினம்.. போட்ட காசை எடுக்க போராட்டம்

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ராஜமௌலி. பாகுபலி படங்களுக்கு பிறகு இவருடைய மதிப்பு பெரிய அளவில் உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சம்பளமே 100 கோடி வாங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ராஜமௌலி தன்னுடைய ஒவ்வொரு படங்களையும் எப்படி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதை தெளிவாகப் புரிந்துகொண்டு செய்து வருகிறார். எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறார்.

அந்த வகையில் அடுத்ததாக ராஜமௌலி இயக்கத்தில் ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகிறது.

தற்போது ராஜமவுலியின் ஐடியாவை மணிரத்னம் பின்பற்ற தொடங்கி விட்டாராம். பாகுபலி போல் இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து வருகிறார். அதில் முதல் பாகம் அடுத்த வருடம் வெளியாக உள்ளது.

பாகுபலி படத்தைப் போலவே முதல் பாகத்தில் ஒரு பெரிய ட்விஸ்ட் ஒன்றை வைத்து முடிக்கிறார் மணிரத்னம். அதுதான் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் எனவும், அதை பாகுபலி படத்தை எப்படி விளம்பரம் செய்தார்களோ அதேபோல் செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்துள்ளாராம்.

அதற்கு காரணம் நினைத்த பட்ஜெட்டைவிட பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் எக்கச்சக்கம் ஆகிவிட்டதால் எப்படியாவது போட்ட காசை எடுக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார் மணிரத்தினம்.

ponniyin-selvan-title-look
ponniyin-selvan-title-look
- Advertisement -