தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் வைபவ் நடிப்பில் அடுத்ததாக மலேசியா டு அம்னீஷியா என்ற படம் வெளியாக உள்ளது.
வாணி போஜன் மற்றும் வைபவ் கூட்டணியில் ஏற்கனவே வெளியாகி வெற்றியை பெற்ற லாக்கப் படத்தில் இவர்களது ஜோடி பெரிதும் பேசப்பட்டது. அந்தப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் வாணி போஜன் மற்றும் வைபவ் கூட்டணியில் மொழி, பயணம் படங்களை எடுத்த ராதாமோகன் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் மலேசியா டு அம்னீசியா.
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதிலும் பொய் சொல்வதை கண்டுபிடிக்கும் மிஷின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
முதலில் தியேட்டர் ரிலீஸ் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது நேரடியாக ஜீ5 என்று ஓடிடி தளத்தில் வருகிற மே 28-ஆம் தேதி வெளியாக உள்ளது.
சமீபகாலமாக வைபவ் நடிக்கும் படங்கள் வித்தியாசமாகவும் காமெடி கலாட்டாக்கள் அதிகமாகவும் இருப்பதால் இளம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.