விடுதலை 2-ல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மலையாளத்து பைங்கிளி.. ரவுண்டு கட்ட போகும் வெற்றிமாறன்

Viduthalai 2: வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படம் இரண்டு பாகங்களாக உருவாக்கி உள்ளது. இதில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிலும் சூரி நிறைய படங்களில் காமெடிகளாகவே நடித்துவிட்டு இப்போது முதல் முதலாக ஹீரோவாக விடுதலை படத்தில் நடித்து அசத்தி இருக்கிறார்.

அதேசமயம் பெருமாள் வாத்தியார் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதியும் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார். முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகமும் இந்த வருட இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Also Read: ஆசை ஆசையாய் வாங்கிய காரை நண்பனுக்கு தாரவார்த்து கொடுத்த விஜய் சேதுபதி.. ஏமாற்றிய துரோகிக்கு வந்த கிப்ட்

முதல் பாகத்தில் விஜய் சேதுபதியை முரட்டு சிங்கிள் ஆகவே காட்டிவிட்டனர். ஆனால் இரண்டாம் பாகத்தில் வெற்றிமாறன் இவருக்கென்று ஒரு மலையாள பைங்கிளியை கதாநாயகியாக தேர்வு செய்துள்ளார். தற்போது விடுதலை பார்ட் 2 படம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகிறது.

முதல் பாகம் எதிர்பார்த்ததை விட வெற்றி அடைந்ததால், அதைவிட விடுதலை பார்ட் 2 வெற்றி அடைய வேண்டும் என்ற முனைப்பில் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி முழு படத்திலும் வரப்போகிறார். இதனால் இவருக்கு புதிதாக ஜோடியை சேர்த்துள்ளார் வெற்றிமாறன்.

Also Read: ஆசை ஆசையாய் வாங்கிய காரை நண்பனுக்கு தாரவார்த்து கொடுத்த விஜய் சேதுபதி.. ஏமாற்றிய துரோகிக்கு வந்த கிப்ட்

விஜய் சேதுபதிக்கு கதாநாயகியாக நடிப்பதற்கு மஞ்சு வாரியருக்கு வாய்ப்பை கொடுத்துள்ளார். அவரும் கதையை கேட்டு உடனே ஒப்புக்கொண்டுள்ளார். அப்போ கண்டிப்பா விடுதலை 2 வேறு மாதிரி வெற்றிமாறன் வெற்றி வரிசையில் இருக்கும் என பேசப்படுகிறது.

மேலும் 44 வயதானாலும் மஞ்சு வாரியருக்கு என்றே இன்னமும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஏற்கனவே விருது வழங்கும் விழா ஒன்றில் விஜய் சேதுபதி மஞ்சு வாரியரை பார்த்து, ‘உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்று அசடு வழிந்து கொண்டே லுக்குக்கு விட்டது செம க்யூட்டாக இருந்தது. அந்த ஜோடி இப்போது திரையில் விடுதலை 2 படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர் என்ற தகவல் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்திருக்கிறது.

Also Read: ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த விஜய் சேதுபதியின் ஜவான் பட போஸ்டர்.. ஷாருக்கானுக்கு வில்லனா சும்மாவா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்