பிரபுதேவாவை ரொம்ப நாளா காதலிக்கிறேன்.. திடீர் குண்டை போட்ட மலையாள நடிகை

தமிழ் சினிமாவில் உருவத்துக்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபித்தவர் பிரபுதேவா. இவரது நடனத்துக்கு ஆடாத கால்கள் கிடையாது. அந்த அளவுக்கு தன்னுடைய நுணுக்கமான ஆட்டத்தால் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற பெயர் பெற்றார்.

ஹீரோவாகவும் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்து அதிலும் பட்டையைக் கிளப்பினார். தமிழில் விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு என இரண்டு படங்களை இயக்கி உள்ளார்.

அதேபோல் பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றி விட்டார். தற்சமயம் மீண்டும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார் பிரபுதேவா. இடையில் பெரிய படங்களுக்கு நடன இயக்குனராகவும் ஒரு பாடலுக்கு பணியாற்றி வருகிறார்.

பிரபுதேவா தன்னுடைய முதல் காரணம் திருமணத்தில் திருப்தி இல்லாததால் நடிகை நயன்தாராவை இடையில் காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு சென்ற அந்த காதல் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டது. அதன்பிறகு பிரபுதேவா சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.

ஆனால் நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனுடன் காதல் வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நீண்ட நாட்களாக பிரபுதேவாவை காதலித்து வருவதாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியார் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில்தான் பிரபுதேவா ஒரு மருத்துவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என அவரது சகோதரர் உறுதிபடுத்திய நிலையில் இது என்னடா புதுக் கூத்து என்கிற நிலைமையில் இருக்கிறது இந்த செய்தி. தற்போது மஞ்சுவாரியார் நடிக்கும் ஒரு படத்தில் பிரபுதேவா நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அந்த புகைப்படத்தை பகிர்ந்து சிறுவயதிலிருந்தே பிரபுதேவாவை காதலிக்கிறேன் என்ற கேப்டன் உடன் அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அவர் எதார்த்தமாக போட்டது இணையத்தில் எக்குத்தப்பாக மாறிவிட்டது.