வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

டூ பீஸ் புகைப்படத்தை கேட்ட ரசிகர்.. அசராமல் போட்டோவை வெளியிட்ட மாளவிகா!

பட்டம் போலே என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான மாளவிகா மோகன், அதன் பிறகு தமிழில் சூப்பர் ஸ்டாருடன் பேட்ட, பிறகு நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

அவர் சமீபத்தில் தனுசுடன் இணைந்து மாறன் திரைப்படத்தில் நடித்திருந்தார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. தற்போது ஹிந்தியில் Tauba என்ற இசை ஆல்பம் ஒன்றில் கவர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார். இப்பாடல் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப்பாடலின் மாளவிகா மோகன் நடனமாடி இருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளேயே 8 மில்லியன் பார்வையாளர்களின் கவனத்தை பெற்று ட்ரெண்டாக்கி உள்ளதை மாளவிகா மோகன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

மேலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து மாளவிகா மோகன் அவ்வபோது தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை குஷி படுத்துவார். அத்துடன் சமூக வலைதளங்களில் தன்னுடைய ரசிகர்களிடம் உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மாளவிகா மோகன் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் எடுத்த கடைசியான பிகினி புகைப்படத்தை அனுப்புமாறு எல்லை மீறி கேட்டுள்ளார்.

உடனே மாளவிகா மோகன் கோபப்பட்டு, வெறும் பிகினி உடை மட்டுமே இருக்கும் புகைப்படத்தை எடுத்து அந்த நபருக்கு அனுப்பியுள்ளார். தற்போது பலரும் மாளவிகா மோகன் ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் என கூறி வருகின்றனர்.

maalavika-twit
maalavika-twit
- Advertisement -

Trending News