சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

மாஸ்டர் வில்லனுடன் நைட் பார்ட்டி கொண்டாடிய மாளவிகாவின் புகைப்படம்.. அடுத்த வாய்ப்பு கன்ஃபார்ம் போல

ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், அந்தப் படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் இவர் நடிப்பு பெரிதும் பேசப்படா விட்டாலும், தளபதியின் கதாநாயகியாக தமிழ் ரசிகர்களிடம் சீக்கிரம் பிரபலமானார். அதன்பின் தனுஷுடன் மாறன் படத்திலும் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்திருந்தார். தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் போது உங்களுடன் சேர்ந்து நடிக்க ஆசை என்பது போன்ற ஒரு பதிவை செய்து இருந்தார், உடனே மாறன் படத்தில் வாய்ப்பு கொடுத்தார் தனுஷ்.

இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காததால், தமிழில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு வராததால் சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் மாளவிகா மோகனன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிரபலங்களின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து மாளவிகாவிற்கு அறிமுகமான விஜய் சேதுபதி இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது இவர்கள் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.

இவர்களது கூட்டணியில் இனி அடுத்த படம் வரவும் வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் விஜய் சேதுபதி, அவர் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் சிபாரிசு செய்ததால் தான் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அடுத்தடுத்து அவருடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

malavika-mohanan
malavika-mohanan

அதேபோல விஜய் சேதுபதி-மாளவிகா மோகனன் கம்போவில் அடுத்த படம் வெளியாக வாய்ப்பிருக்கிறது. மேலும் தற்பொழுது மாளவிகா மோகனன் ‘யுத்ரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி கொண்டிருக்கும் இந்த படத்தின் மூலம் பாலிவுட் நல்ல என்ட்ரி கொடுக்கப் போகிறார்.

malavika-mohanan-vjs-cinemapettai
malavika-mohanan-vjs-cinemapettai
- Advertisement -

Trending News