கொள்கைக்காக பிரம்மாண்ட பட வாய்ப்பை தட்டிக் கழித்த மகேஷ் பாபு.. அதுவும் எவ்வளவு பெரிய படம் தெரியுமா?

அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் படம் மூலம் பிரபலமான இயக்குனர் நித்தீஷ் திவாரி தற்போது ராமாயண கதையை ராமாயணா 3டி என்ற பெயரில் இயக்க உள்ளார். 3டி படமாக தயாராகும் இப்படத்தில் சீதையாக தீபிகா படுகோனும், ராவணனாக ஹிர்த்திக் ரோஷனும் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில்தான் இப்படத்தில் ராமனாக நடிக்க தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவிடம் கேட்டுள்ளனர். ஆனால் மகேஷ்பாபு தனக்கென கொண்டுள்ள தனிக் கொள்கை காரணமாக இப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.

அதாவது மகேஷ் பாபு தனக்கென சில கொள்கைகளை கொண்டுள்ளார். அதில் ஒன்று பிற மொழிகளில் நடிப்பதில்லை. மற்றொன்று ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்பதை கடைபிடித்து வருகிறார். விஜய்யின் துப்பாக்கி படம் மகேஷ்பாபுவுக்கு மிகவும் பிடித்த படம். ஆனால் ரீமேக்கில் நடிப்பதில்லை என்பதால் துப்பாக்கி ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்தும் அவர் நடிக்கவில்லை.

mahesh babu

துப்பாக்கி மட்டுமல்ல இது போல் பல படங்களை மகேஷ்பாபு தட்டிக் கழித்துள்ளார். இதுமட்டுமின்றி அவரது தந்தை கிருஷ்ணா பாதாள பைரவி படத்தை இந்த காலகட்டத்திற்கு ஏற்ப எடுத்து அதில் மகேஷ் பாபுவை நடிக்க வைக்க வேண்டும் என தனது விருப்பத்தை கூறியபோது அதற்கும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ராமாணயா 3டி படம் தெலுங்கில் அல்லாமல் முழுக்க முழுக்க ஹிந்தியில் மட்டுமே தயாராவதால் மகேஷ்பாபு நடிக்க முடியாது என கைவிரித்துள்ளார். மேலும் ராஜமௌலியின் அடுத்தப் படத்தில் அவர் நடிக்கயிருப்பதும் ஒரு காரணமாகும். தற்போது ராமனாக நடிக்க வேறு நடிகர்களை படக்குழுவினர்கள் தேடி வருகிறார்கள்.

- Advertisement -