விருதுகளை தட்டி தூக்கிய மகேஷ் பாபு.. ஒரேபடத்திற்கு இத்தனை விருதுகளா!

சாக்ஸி எலன்ஸ் அவார்ட்ஸ் 2019 மற்றும் 2020 ஆண்டுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆங்கிலம் மற்றும் தெலுங்கு சினிமாவிற்கு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் 2019 ஆம் ஆண்டு மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த மகரிஷி படம் மூன்று விருதுகளை பெற்றுள்ளது. இதனால் இப்படக்குழு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளனர்.

சிறந்த திரைப்படமாக மகரிஷி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மகரிஷி படம், ஒரு பணக்கார தொழிலதிபர் தனது முன்னாள் வகுப்பு தோழனுடன் இந்தியாவிற்கு திரும்புகிறார், ஆனால் தனது நண்பரின் அவலநிலையை பற்றி அறிந்ததும், அவருக்கு உதவ முயன்றார் மற்றும் கிராமவாசிகளுக்கு ஒரு மீட்பராக மாறினார். இதில் தொழிலதிபராக மகேஷ்பாபு நடித்து உள்ளார்.

maharshi
maharshi

மகேஷ் பாபுவிற்கு சிறந்த ஹீரோக்கான விருது மஹரிஷி படம் பெற்றுத்தந்துள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, அல்லாரி நரேஷ் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்.

வம்சி பைடிபைலி மகரிஷி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்காக இவருக்கு நேஷனல் பிலிம் அவார்ட் கிடைத்துள்ளது. இப்போது மகரிஷி படத்திற்கு சிறந்த இயக்குனர் விருது வம்சி பைடிபைலிக்கு சாக்ஸி எலன்ஸ் அவார்ட்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

மகரிஷி திரைப்படம் சாக்ஸி எலன்ஸ் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிறந்த திரைப்படம், சிறந்த ஹீரோ, சிறந்த இயக்குனர் என விருதுகளை அள்ளிக் குவித்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்