தேசிய விருது பெற்ற மதுபாலாவின் படங்கள்.. தமிழ்ல மட்டும் இத்தனை படங்களா.?

ஹிந்தி,தமிழ்,தெலுங்கு, கன்னடம்,மலையாள மொழிகளில் முன்னணி கதாநாயகி தான் மதுபாலா. இவர் முதலில் மலையாள சினிமாவில் தான் அறிமுகமானார். மம்முட்டி, அர்ஜூன்,அக்‌ஷய் குமார், பிரபுதேவா,ஜிதேந்திரா, ஜாக்கி ஷெராஃப், கோவிந்தா,சயிஃப் அலிகான் என முன்னணி நடிகர்களுன் நடித்தார்.

அழகன்: 1991இல் கே பாலச்சந்தர் இயக்கத்தில் அழகன் திரைப்படத்தில் மதுபாலா அறிமுகமானார். இப்படத்தில் மம்முட்டி, பானுப்பிரியா,கீதா என பலரும் நடித்திருந்தனர்.

வானமே எல்லை: 1992ல் கே பாலச்சந்தர் எழுதி,ராஜம் பாலச்சந்தர் இயக்கிய படம்தான் வானமே இல்லை. இப்படத்தில் ஆனந்த் பாபு,  ரம்யா கிருஷ்ணன், பானுப்பிரியா,  மதுபாலா,பப்லு பிருத்திவிராஜ்,விசாலி கண்ணதாசன் ஆகியோர் நடித்திருந்தனர்.

ரோஜா: ரோஜா திரைப்படம் மதுபாலாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது.மணிரத்தினம் இயக்கத்தில் 1992இல் ரோஜா திரைப்படம் வெளியானது. அதில் மதுபாலாவுக்கு ஜோடியாக அரவிந்த்சாமி நடித்திருந்தார். இப்படத்தின் பாடலாசிரியர் வைரமுத்து, இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். இப்படத்தில் பாடல்கள் சிறந்த பாடல்களுக்கான பல விருதுகள் பெற்றது. ரோஜா திரைப்படம் சிறந்த படம் என தேசிய விருது பெற்றது.

roja-movie-cinemapettai
roja-movie-cinemapettai

ஜென்டில்மேன்: 1993இல் ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஷங்கர்.இப்படத்தில் அர்ஜூன்,மதுபாலா, கவுண்டமணி,செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

செந்தமிழ் செல்வன்: மனோஜ் குமார் இயக்கத்தில் 1994 இல் வெளிவந்த படம் செந்தமிழ்ச்செல்வன். இப்படத்தில் மதுபாலாக்கு ஜோடியாக பிரசாந்த் நடித்திருப்பார்.

மிஸ்டர் ரோமியோ: ஆர்பி சவுத்ரி தயாரிப்பில், கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1996இல் மிஸ்டர் ரோமியோ திரைப்படம் வெளியானது. இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் பிரபுதேவா, ஷில்பா ஷெட்டி,மதுபாலா நடித்திருந்தனர். இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

பாஞ்சாலங்குறிச்சி: 1996 இல் இயக்குனர் சீமான் இயக்கிய திரைப்படம் பாஞ்சாலங்குறிச்சி. இப்படத்தில் பிரபு, மதுபாலா, வடிவேலு, விஜயகுமார், சந்திரசேகர், பிரசன்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.

Next Story

- Advertisement -