மதனின் மனைவி செய்தியாளர்களை ஏன் சந்தித்தார் தெரியுமா.. இணையத்தில் வெளியான தகவல்

பப்ஜி விளையாட்டுகள் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம். சீன தயாரிப்பான இந்த விளையாட்டை சமீபத்தில் மத்திய அரசு சில காரணங்களுக்காக தடை செய்து உத்தரவிட்டது.

பப்ஜி கேம் இந்தியாவில் பிரபலமாக இருந்த தருணத்தில் யூடியூப்பில் பப்ஜி தொடர்பான பல்வேறு டிரிக்குகளை வெளியிடுவதற்காக பல்வேறு சேனல்கள் துவங்கப்பட்டு பல ஆயிரம் வீடியோக்களும் பதிவேற்றப்பட்டன.

இப்படியாக புகழ் பெற்றவர் தான் பப்ஜி மதன் என்பவரும் கூட. பப்ஜி விளையாடும் சில சிறார்களிடம் இவர் ஆபாசமாக பேசியதற்காகவும் அவர்களிடம பணம் பெற்றதற்காகவும் கடந்த 18ஆம் தேதி இவர் கைது செய்யப்பட்டார்.

madhan
madhan

இவருக்கு உடந்தையாக இருந்து பலரிடம் ஆபாசமாக பேசிய குற்றத்திற்காக மதனின் மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டார். கைக்குழந்தை இருப்பதால் நிபந்தனை ஜாமீனில் கைது செய்யப்படாமல் இருக்கிறார் கிருத்திகா.

சமீபத்தில் காவல் நிலையம் வந்து திரும்பிய கிருத்திகா திடீரென செய்தியாளர்களிடம் ஒரு பேட்டி கொடுத்தார். தங்களிடம் சொகுசு கார்கள் இல்லை என்றும் ஒரே ஒரு ஆடி கார்தான் உள்ளது என்றும் ஆபாசமாக பேசியதும் தாங்களாக பேசவில்லை என்றும் கூறினார்.

மேலும் தொடர்ந்த கிருத்திகா தங்களை நான்கு டிரிக்கர்கள் தான் இவ்வாறு பேச வைத்ததாகவும் தொடர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் அவர்களே புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மதன் மனைவி கிருத்திகாவின் வங்கி முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் செய்தியாளர்கள் மதன் பற்றியும் வழக்கு பற்றியும் பல்வேறு கேள்விகள் கேட்கவே பதிலேதும் சொல்லாமல் நழுவினார் கிருத்திகா.

- Advertisement -