வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

மாயோன் படத்திற்கு கிடைத்த வெற்றி.. போஸ்டருடன் 2ம் பாகத்தின் ரிலீசை உறுதி செய்த படக்குழு!

டபுள்மீனிங் புரொடொக்ஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்து, கிஷோர் இயக்கிய மாயோன் படத்தில் சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். இந்தப் படம் ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகி தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

பழமையான கோயிலில் இருக்கும் தங்கம், வைர நகைகள் அடங்கிய புதையலைத் தேடி செல்லும் போது ஏற்படும் அமானுஷ்ய அனுபவத்தை பற்றிய கதைதான் மாயோன் திரைப்படம். இதில் பழமையான கோயிலில் புதையல் இருப்பதாக தொல்லியல் துறைக்கு தகவல் கிடைக்க அதை கண்டுபிடிக்க விரையும் தலைமை அதிகாரியாக இந்தப்படத்தில் சிபிராஜ் நடித்திருக்கிறார்.

இதனால் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பால் சந்தோசமடைந்த சிபிராஜ் படத்தின் இயக்குனர் கிஷோருக்கு தங்க சங்கிலியைப் பரிசாக அளித்து மகிழ்ந்தார். புதையல் வேட்டை தொடர்பாக எடுக்கப்பட்ட மாயோன் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் விரைவில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை தற்போது தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

மேலும் அமானுஷ்யங்கள் நிறைந்த திரில்லர் படமான மாயோன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் கிஷோரே இயக்குகிறார். விரைவில் அதற்கான படப்பிடிப்பு துவங்கப்பட்டு அடுத்த வருடம் 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

தற்போது மாயோன் 2 படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் இடது பக்கம் போகோ சிலை, நடுவில் நவபாசன சிலை, வலது புறம் இயேசு நாதர் சிலை போல் வடிவமைக்கப்பட்டு ஒரே சிலை மயமாக உள்ளது. போஸ்டரில் ஆங்காங்கே வேல் இடம்பெற்றுள்ளது.

இதனால் இது எந்த மாதிரியான கதையாக இருக்கும் என ரசிகர்கள் யூகித்தாலும் அவர்களுக்கு குழப்பம் மட்டுமே மிச்சம். ஒருவேளை முதல் பாகத்தில் பெருமாள் இடம் பெற்றது போல இரண்டாம் பாகத்தில் முருகனை மையமாகக் கொண்டு படம் உருவாக்குவது போல் தெரிகிறது.

maayon-2-poster-cinemapettai
maayon-2-poster-cinemapettai
- Advertisement -

Trending News